இதுக்காகத் தான் டிடி – யை டைவோர்ஸ் பண்ணினேன் ! மனம் திறந்த முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் !!

Published : Oct 17, 2019, 07:22 PM IST
இதுக்காகத் தான் டிடி – யை டைவோர்ஸ் பண்ணினேன் !   மனம் திறந்த முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் !!

சுருக்கம்

தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி ஏராளமான ஆண் நண்பர்களுடன் பழகியதால்தான் அவரை விவாகரத்து செய்ததாக முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரது சகோதரி ப்ரியதர்ஷினி கலைஞர் தொலைக்காட்சியில் பணி புரிந்து வருகிறார்.

திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை வெற்றி அடைந்தன. 

ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித் த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அண்மையில்  கூட என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் டிடி தனது  நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். . ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த பிரிவுக்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. 

இந்நிலையில் விவாகரத்து செய்த டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் ஒரு பேட்டி ஒன்றில் முதன் முறையாக அதற்கான காரணத்தை மனம் திறந்து கூறியுள்ளார். 

அதாவது திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க கூடாது என்றும், எந்த படத்திலும் நடிக்கக்கூடாது எனவும்  கூறியுள்ளார். 

ஆனால் அதனை டிடி கேட்கவில்லை. அது மட்டுமல்லாமல் டிடி க்கு ஏராளமான  ஆண் நண்பர்களுடன் அதிக பழக்கம் இருந்ததாலும்  தான் அவரை விவாகரத்து செய்ததாக ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!