கமல் பிறந்தநாளன்று ரஜினியின் ‘தர்பார்’பட மோஷன் போஸ்டர்...அடம் பிடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்...

Published : Nov 05, 2019, 05:37 PM IST
கமல் பிறந்தநாளன்று ரஜினியின் ‘தர்பார்’பட மோஷன் போஸ்டர்...அடம் பிடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்...

சுருக்கம்

இப்படம் ஒரே நாளில் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மொழிகளில் வெளியாகவிருப்பதைத் தொடர்ந்து 4 மொழிகளுக்குமான டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த 4 மொழிகளுக்குமான மோஷன் போஸ்டர்களை அந்தந்த மொழிகளின் முன்னணி நட்சத்திரங்கள் வரும் 7 ம் தேதி கமலின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவசர அவசரமாக வெளியிடுகின்றனர்.  

கமலின் 65 வது பிறந்தநாள் வரும் நவம்பர் 7ம் தேதியன்று தடபுடலாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதே நாளில் ரஜினியின் ‘தர்பார்’பட மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இதை ஒட்டி ஏற்படவிருக்கும் கமல், ரஜினி ரசிகர்களின் மோதலை ரசிப்பதற்காகவே திட்டமிட்டு முருகதாஸ் அந்த தேதியில் ரிலீஸ் செய்வதாகத் தெரிகிறது.

பொங்கலுக்கு வெளியாகவுள்ள ரஜினியின் தர்பார் பட போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படம் ஒரே நாளில் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மொழிகளில் வெளியாகவிருப்பதைத் தொடர்ந்து 4 மொழிகளுக்குமான டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த 4 மொழிகளுக்குமான மோஷன் போஸ்டர்களை அந்தந்த மொழிகளின் முன்னணி நட்சத்திரங்கள் வரும் 7 ம் தேதி கமலின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவசர அவசரமாக வெளியிடுகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரெதிர் அணியாகச் செயல்பட்டு வரும் கமல் ரஜினி ரசிகர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் வெளியிடுவதால் ’யார் டாப்?’ என்று கண்டிப்பாக  மீண்டும் கருத்து மோதல்களில் ஈடுபடுவார்கள். தங்கள் தலைவரை ட்ரெண்டிங்கில் கொண்டு வர அரும்பாடுபடுவார்கள் என்ற பப்ளிசிட்டி நோக்கத்திலேயே தர்பார் போஸ்டரை கமல் பிறந்தநாளில் வெளியிட இயக்குநர் முருகதாஸ் பிடிவாதம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. கமல், ரஜினி ரசிகர்களே கட்டி உருள ரெடியா இருங்க பாஸ்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?