
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஸ்கீரின்களில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள "தர்பார்" படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் லைகா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டாரின் மாஸ் ஓப்பனிங் பாடலான சும்மா கிழி பாடலில் விஜய், அஜித் வெர்ஷனை வைத்து உருவாக்கப்பட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக சும்மா கிழி பாடல், ஐயப்பன் பாடலின் காப்பி என்று சர்ச்சை கிளப்பிய போது சோசியல் மீடியாவில் மீம்ஸ்கள் பறந்தது.
அப்படியிருக்க, சூப்பர் ஸ்டாருக்காக செதுக்கப்பட்ட வரிகளில், விஜய், அஜித்தின் மூமெண்டுகளை வைத்து பக்கா மாஸாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பாடலை தல, தளபதி ஃபேன்ஸ் மாஸாக கொண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் அதை பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களே எங்க தலைவர் மூட்டிய தர்பார் நெருப்பில் குளிர்காய்வது மட்டுமில்லாமல், கெத்து வேற காட்டுறாங்க என கலாய்க்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.