இனி விஜய், அஜித் சம்பளதிற்கும் வந்தது ஆபத்து.....!!!

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 08:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
இனி விஜய், அஜித் சம்பளதிற்கும் வந்தது ஆபத்து.....!!!

சுருக்கம்

தோராயமாக 30 கோடி முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த முன்னனி நடிகர்களுக்கு இனி இவ்வளவு பெரிய தொகையை யார் சம்பளமாக கொடுப்பார்கள் என்கிற கேள்விக்குறி பெரும்  விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே திருட்டு விசிடி , ரிலீஸ் அனா முதல் நாளே  சமூக  வலயத்தளங்களில் படம் ரிலீஸ், சட்டலைட் உரிமை விற்பதில் பிரச்சனை என இடியாப்ப  சிக்கல்களில் விழி பிதிங்கி நிற்கும்   தமிழ் சினிமாவிற்கு பேர்  இடியாக வந்து இறங்கியுள்ளது, மோடியின்  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கான தடை .

தமிழ் திரையுலகத்தின்  பொற்காலமாக  கருதப்படும் 70, 80களில் ஹீரோக்களின் சம்பளமும் பட தயாரிப்பும் கணிசமாக இருந்ததால், நிறைய திரைப்படங்கள் வெளியானது 100 நாட்களை கடந்து ஓடியது தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது.

அனால் இன்று ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயம் செய்வது வெள்ளி  , சனி , ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் தான்.

நிலைமை இவ்வாறு  இருக்க தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்த  கார்பரேட்  கம்பெனிகள் ஹீரோக்களின்  சம்பளத்தை தாறு, மாறாக உயர்தின.

35 கோடி சம்பளம் 100 கோடி ரூபாய் தயாரிப்பு  என்பது வெறும் வெள்ளை பணத்தால் மற்றுமே சத்தியம் இல்லை.

அஜித், விஜய் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தி வெள்ளையாக வாங்கினாலும் , ஒரு படத்தை தயாரித்து வெளிவரும் பொது 50 சதவீதம் கருப்பு பணம் இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,முன்னனி  ஹீரோக்களுக்கு இதே சம்பளம் கொடுக்கப்படுமா? அல்லது தயாரிப்புக்காக செலவிட படுமா என்கிற கேள்வி எழும் போது, பெரிய ஹீரோக்களின் சம்பளம் நிச்சயம் குறைத்தால் தான்  புதிய திரைப்படங்களை காண முடியும் என்பது திரை விமர்சனர்களின் கருத்தாகவுள்ளது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன?
பொண்டாட்டி பாசம் தடுக்குதோ... ஞானத்துக்கு செம டோஸ் கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்