அண்டப்புளுகு ஆகாசப்புளுகு அப்புறமா நம்ம உடான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் புளுகு

Published : Nov 26, 2018, 01:40 PM ISTUpdated : Nov 26, 2018, 01:41 PM IST
அண்டப்புளுகு ஆகாசப்புளுகு அப்புறமா நம்ம உடான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் புளுகு

சுருக்கம்

குடி என்றால் என்னவென்றே தெரியாது. சரக்கு பாட்டில்கள் சதுரமாக இருக்குமா அல்லது செவ்வகமாக இருக்குமா என்பது கூட தெரியாத அப்பாவி போல் தன் மீது போலீஸார் கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் உடான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம்.


குடி என்றால் என்னவென்றே தெரியாது. சரக்கு பாட்டில்கள் சதுரமாக இருக்குமா அல்லது செவ்வகமாக இருக்குமா என்பது கூட தெரியாத அப்பாவி போல் தன் மீது போலீஸார் கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் உடான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம்.

ஏற்கனவே பலமுறை குடிபோதையில் வாகனம் ஓட்டிய பஞ்சாயத்துகளுக்காக போலீஸாரிடம் சிக்கி சின்னாபின்னமான காயத்ரி ரகுராம் நேற்றும் பெரும்போதையில் வண்டி ஓட்டி போலீசில் மாட்டி ரூ.3500 அபராதம் கட்டி வீடு திரும்பினார். அவர் அபராதம் கட்டி அவமானப்பட்ட செய்தி காவல்துறையின் செய்திக்குறிப்பாக இன்று அனைத்து தினசரிகளிலும் கூட வெளிவந்தது.

இந்நிலையில் முற்றிலும் தெளிந்த நிலையில், நேற்று நடந்ததாக வெளிவந்த செய்திகள் அப்பட்டமான புழுகு என்றும் ஒரு பத்திரிகை நிருபர் குடித்துவிட்டு வண்டி ஓட்டிவிட்டு அப்பழியை தன்மீது போட்டிருப்பதாகவும் தொடர்ந்து ட்வீட் பண்ணிவருகிறார் காயத்ரி.

'எதையோ மறைக்க நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன். பேனாவும் பத்திரிகையும் பலமானதாக இருக்கலாம். ஆனால், எனது ஆன்மாவைவிட வாழ்க்கையைவிட எதுவும் வலுவானது இல்லை.என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். நான் துணிச்சலுடன் வாழ்வேன். இந்த பொய் செய்தியை உருவாக்கிய செய்தியாளர்தான் போதையில் இருந்தார்’ என்கிறார் காயத்ரி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ஜனநாயகன்' லீக் - நஷ்டத்தை ஈடுகட்ட தளபதி விஜய் எடுத்த முடிவால் - ஆடி போன ரசிகர்கள்!
Asha bhosle | ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!