
அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ குறித்து சில விமர்சகர்களின் விமர்சனங்கள் குறித்தே தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில் தற்போது அதே காரணத்துக்காக பிரபல யூடியூப் இணையதள விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் அஜீத் ரசிகர்களின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்.
அஜித் நடிப்பில் கடந்த 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்துத் தெளிவாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பெண் நோ என்று சொன்னால் அதனின் அர்த்தம் நோ என்று அஜித் கூறிய வசனத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் படத்தின் வசூலும் எதிர்பார்த்ததை விட வாரிக் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல யூடியுப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன் வழக்கம் போல் எதிர்மறையாக விமர்சனம் தெரிவித்துள்ளார். படத்தில் அரசு விமர்சகர் பாண்டே போலவே அந்த மாதிரிப்பொண்ணுங்களுக்கு அப்பிடித்தான் நடக்கும் என்று மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து நடன இயக்குநரும், பிக் பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராம் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,புகை மற்றும் மது அருந்தும் பெண்கள் ஒரு ஆணை தொட்டு பேசினால் அவர்கள் படுக்கையைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று அவர் நினைக்கிறார். அத்தகைய ஆண்களில் ஒருவராகத்தான் இவர் இருக்க வேண்டும். அவரது இளம் வயதில் அவர் இப்படி பெண்களிடம் நடந்திருப்பார் அல்லது இன்னும் அந்த விஷயங்களைச் செய்துகொண்டு தான் இருப்பார். அதனால் தான் அவரின் விமர்சனங்களும் இப்படி இருக்கிறது என்று ப்ளூ சட்டை மாறனுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.