பெண்கள் ஆணுறைகளை எடுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஒத்துழைக்க வேண்டும்... சினிமா டைரக்டரின் விபரீத வேண்டுகோள்..!

By Thiraviaraj RMFirst Published Dec 4, 2019, 6:30 PM IST
Highlights

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என திரைப்பட இயக்குநர் கூறியுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. 

தன்னை சினிமா இயக்குநர் என்று அறிவித்துக் கொள்ளும் டேனியல் ஷர்வன் என்பர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘பாலியல் வன்கொடுமை ஒன்றும் மோசமான ஒன்று இல்லை. ஆனால், கொலை ஏற்றுக்கொள்ள முடியாதது. பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதால் தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படும் பெண்களைக் கொலை செய்கிறார்கள்.

வன்முறையற்ற பாலியல் வன்கொடுமை என்பதன் மூலமே பாதிக்கப்படும் பெண்களை, கொடூரமாக கொல்லப்படுவதில் இருந்து பாதுகாக்க ஒரே வழி. பெண்கள் மீது நடைபெறும் வன்முறைக்கு சமூகம் மற்றும் பெண்கள் அமைப்புகள்தான் முக்கிய காரணங்கள். நிர்பயா சட்டம் வன்முறையான பாலியல் வன்கொடுமையைக் கட்டுப்படுத்தாது.

அதனால், பெண்கள்தான் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பெண்கள், கையோடு ஆணுறைகளை எடுத்துச் செல்லுங்கள். பாலியல் வன்கொடுமை செய்பவர்களிடம் கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள். கொலையைவிட பாலியல் வன்கொடுமை என்பது மோசமான ஒன்று. கொலை என்பது பாவம். ஆண்களுக்கு பாலியல் ஆசை தன்னிறைவு அடையும்போது அவர்கள் பாதிக்கப்படும் பெண்களைக் கொலை செய்யமாட்டார்கள். பாலியல் வன்கொடுமைதானே என்று காவல்துறையும், பெண்கள் அமைப்பும் பாலியல் வன்கொடுமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும்போது, பாதிக்கப்படும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் விட்டுவிடுவார்கள்’எனக் குறிப்பிட்டுள்ளார். 

If this is for real, I want to die. pic.twitter.com/yT5zsepJ6f

— Sonal Kalra (@sonalkalra)

 

டேனியல் ஷர்வனின் இந்தப்பதிவுக்கு பாடகி சின்மயி உள்ளிட்ட பரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

click me!