’தமிழ்ப் படங்களுக்கு விளம்பரம் செய்ய என்னை அணுகவும்’...கோடம்பாக்கத்துக்கு குறி வைக்கும் ஹர்பஜன் சிங்...

Published : Aug 04, 2019, 12:50 PM IST
’தமிழ்ப் படங்களுக்கு விளம்பரம் செய்ய என்னை அணுகவும்’...கோடம்பாக்கத்துக்கு குறி வைக்கும் ஹர்பஜன் சிங்...

சுருக்கம்

தனது அட்மின் சின்னாளபட்டி சரவணன் என்பவர் மூலம் அடிக்கடி தமிழில் ட்விட்டுகளை வெளியிட்டு அட்டகாசம் செய்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாக்காரர்களுக்கென்றே ஒரு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

தனது அட்மின் சின்னாளபட்டி சரவணன் என்பவர் மூலம் அடிக்கடி தமிழில் ட்விட்டுகளை வெளியிட்டு அட்டகாசம் செய்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாக்காரர்களுக்கென்றே ஒரு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

சென்னை அணிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பின்னர்,...தல கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும்’ என்கிற ரீதியில் அடிக்கடி தமிழில் ட்விட் போட்டு அசத்தி வருபவர் ஹர்பஜன் சிங். இவரை ட்விட்டர் பக்கத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஃபாலோ பண்ணுகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்  சினிமாக்காரர்களுக்காக தந்து ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறப்பு ஆஃபர் வெளியிட்டிருக்கும் ஹர்பஜன் ,...Harbhajan Turbanator @harbhajan_singh
என் மூலமாக தமிழ் சினிமா  விளம்பரங்கள், ஒப்பந்தங்கள்,வியாபாரம்,சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு அணுகவும்- என் அன்பு தம்பி சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன் Contact : @ImSaravanan_P Num: 9789294947 என்று பதிவிட்டிருக்கிறார்.

அதற்கு,,, அப்போ  யாவாரம் பக்கத்தான் வந்தியா சிங்கு?...யோவ் பஜ்ஜி இது கலவர பூமி , வாய கொடுத்து வாங்கிகட்டிகாத மரியாதை கெட்டுறும் பேசாம போயிரு , நல்லதுக்கு சொல்றேன் 😂😂😂,...உன்ன CSK teamல சேர்த்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ... அத பண்ணிட்ட..... 😤😤,...டேய் கோபாலு, நீ இதுக்கு தான் இத்தன நாள் தமிழ்ல ட்வீட் போட்டியா..? என்று சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?
அவ கூட வாழ முடியாது; டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க!" - அடம் பிடிக்கும் சரவணன்; கலங்கி நிற்கும் பாண்டியன்!