Oscar Awards Ceremony : என்னது..ஆஸ்கர் விருது விழாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லையா?..

Kanmani P   | Asianet News
Published : Feb 10, 2022, 03:43 PM IST
Oscar Awards Ceremony : என்னது..ஆஸ்கர் விருது விழாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லையா?..

சுருக்கம்

Oscar Awards Ceremony : நடப்பாண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உலக அளவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையை சார்ந்த ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். ஹாலிவுட் படத்தில் பணியாற்றியதற்காக ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி போன்ற இந்திய நட்சத்திரங்கள் ஆஸ்கர் விருதை வென்றிருந்தாலும், இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.

இந்த ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்த சூர்யாவின் ஜெய் பீம், மோகன்லால் நடித்த மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் ஆகிய படங்கள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்கள் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறினாலும், ‘ரைட்டிங் வித் பயர்’ என்கிற ஆவணப்படம் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ரின்டு தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படம் மொத்தமாகக் கலந்து கொண்ட 138 படங்களிலிருந்து ஷார்ட் லிஸ்ட் ஆன 15 படங்களில் இடம்பெற்றது. பின்னர் அதிலிருந்து தேர்வாகி இறுதிப் போட்டியில் இடம்பெறும் 5 படங்களில் ஒன்றாகப் போட்டியிடுகிறது ‘ரைட்டிங் வித் பயர்’.

உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதன் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு   ‘டியூன்(Dune)', 'கோடா (CODA)', கிங் ரிச்சர்டு(King Richard)', 'பெல்பாஸ்ட்(Belfast)', 'டோண்ட் லுக் அப்(Don’t Look Up)', 'டிரைவ் மை கார்(Drive My Car)', 'லிக்கொரைஸ் பீஸா(Licorice Pizza)', 'நைட்மேர் அலே(Nightmare Alley)', 'தி பவர் ஆப் தி டாக்(The Power of the Dog)', 'வெஸ்ட் சைடு ஸ்டோரி(West Side Story)' ஆகிய 10 படங்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்தாதோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!