
Coolie vs Leo Advance Booking : திரைப்பட ரசிகர்கள் இப்போது நடிகர்களைப் போலவே இயக்குநர்களையும் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு படத்தைப் பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதில் நடிகர், இயக்குநர் யார், படத்தின் விளம்பரம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெரிய நடிகர் நடித்தால் மட்டும் போதாது, கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், பெரிய நடிகர்கள் இல்லாமல் வெளிவரும் நல்ல படங்களும் வசூலைக் குவிக்கின்றன.
சூப்பர் ஸ்டாருடன் சூப்பர் இயக்குநரும் சேரும்போது, அந்தப் படத்தின் வியாபாரம் பல மடங்கு அதிகரிக்கிறது. இப்போது அந்த வரிசையில் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரையரங்குகளுக்கு வரத் தயாராகிவிட்டது. விக்ரம், லியோ படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதும், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி முதன்முறையாக நடிக்கும் படம் என்பதும் 'கூலி'யின் சிறப்பம்சம். ரசிகர்கள் இந்தப் படத்துக்காக எந்த அளவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதற்கு முன்பதிவே சாட்சி.
கேரளாவிலும் கூலி படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று காலை 10 மணிக்கு 'கூலி'யின் முன்பதிவு கேரளாவில் தொடங்கியது. முதல் 1 மணி நேரத்திலேயே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல் நாள் முன்பதிவில் ரூ.4.11 கோடி வசூலாகியுள்ளது. கேரளாவில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த எம்புரான், லியோ படங்களின் முன்பதிவு வசூலுடன் ஒப்பிட்டால் இது எந்த அளவுக்கு வசூலித்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
முன்னதாக முதல் நாள் முன்பதிவில் எம்புரான் ரூ.8.14 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்து வருகிறது. லூசிஃபரின் இரண்டாம் பாகம் என்பது எம்புரானுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல் லியோ ரூ.5.86 கோடி வசூலித்ததே, கேரளாவில் அதிக முன்பதிவு வசூல் அள்ளிய தமிழ் படத்தின் சாதனையாக இருந்து வருகிறது. எல்சியுவில் வரும் படம் என்பது லியோவுக்கு பலமாக இருந்தது. கூலிக்கு முதல் நாள் முன்பதிவில் ரூ.4.11 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.
முதல் நாள் மொத்த வசூலில் (முன்பதிவு உட்பட) எம்புரான் ரூ.14 கோடியும், லியோ ரூ.12 கோடியும் வசூலித்தன. 'கூலி' வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் இருப்பதால், இறுதி முன்பதிவு வசூல் எவ்வளவு இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது. அதேபோல், முதல் நாள் வசூலையும் கணிக்க முடியாது. காலை 6 மணிக்குத் தொடங்கும் முதல் காட்சிக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தால், படம் மிகப்பெரிய வசூலைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.