
சுசித்ரா ட்விட்டரில் பிரபலங்களின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். முதலில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோரின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்டார். மேலும் தனுஷ், அமலா பால் லீலைகள், பாடகி சின்மயி-அனிருத் லீலை வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் கூறினார். சுசி லீக்ஸ் என்ற பெயரில் அவர் ட்விட்டர் கணக்கில் தினமும் ஒரு குண்டை போட்டு திரையுலகினரை கதிகலங்க வைத்தார்.
அதேபோல, தற்போது தெலுங்கு பட நடிகை ஸ்ரீ ரெட்டியால் டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீ ரெட்டிக்கும் திரையுலக பிரபலங்கள் சிலருக்கும் வேறு மாதிரியான தொடர்பு உள்ளதாக கடந்த சில நாட்களாக கிசு கிசு கிளம்பியுள்ளது. அதுமட்டுமல்ல ஸ்ரீ ரெட்டியுடன் தொடர்பில் இருப்பவர்களில் சில பிரபல நடிகர்களும் இருக்கிறார்களாம்.
சினிமா படம் நடிப்பு ஆசை காட்டி தன்னை மோசம் செய்த திரையுலக பிரபலங்களின் பெயர்களை விரைவில் வெளியிட்டு அவர்களின் உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டப் போவதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் முன்பை விட தற்போது மிகவும் அதிகமாக உள்ளது. அப்படி படுக்கைக்கு அழைப்பவர்களை எக்ஸ்போஸ் செய்யாமல் விட மாட்டேன் என ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி முதல் கட்டமாக ஒரு புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “ஸ்ரீ லீக்ஸ் ஆரம்பம்” #srireddyleaks என்று அந்த போஸ்ட்டில் தெரிவித்துள்ளார். சினிமா ஆசை காட்டி பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுபவர்களின் பெயர்களை பேட்டியில் தெரிவிக்கப் போவதாக ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.