எல்லோருடைய முகமூடியையும் தோலுரித்துக் காட்டிய "அருவி"-க்கு வாழ்த்துகள் - இயக்குநர் சங்கர் டிவிட்...

 
Published : Dec 19, 2017, 10:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
எல்லோருடைய முகமூடியையும் தோலுரித்துக் காட்டிய "அருவி"-க்கு வாழ்த்துகள் - இயக்குநர் சங்கர் டிவிட்...

சுருக்கம்

Congratulations to the aruvi of everyone masks - Director Shankar

எல்லோருடைய முகமூடியையும் தோலுரித்துக் காட்டிய "அருவி"-க்கு வாழ்த்துகள் என்று  இயக்குநர் சங்கர் டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 15-ஆம் தேதி வெளியான படம் அருவி.  இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்,  அதிதி பாலன் உள்பட பல புதுமுகங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

உலகத் திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு உள்ளது. இலட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை இந்தப் படம் பிரதிபலித்தது. எல்லோரது கவனத்தையும் ஈர்த்த இப்படத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் சங்கரும் இந்தப் படத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். "மிகச்சிறந்த படம் அருவி. எல்லோருடைய முகமூடியையும், எல்லா விஷயத்தைப் பற்றிய முகமூடியையும் இப்படம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது".

"அதிதி பாலன், இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?