’பொள்ளாச்சி விவகாரம்...நடிகை ஓவியாவைக் கைது செய்தே ஆகவேண்டும்’...கமிஷனர் அலுவலகத்தில் இன்னொரு புகார்...

Published : Mar 15, 2019, 09:23 AM IST
’பொள்ளாச்சி விவகாரம்...நடிகை ஓவியாவைக் கைது செய்தே ஆகவேண்டும்’...கமிஷனர் அலுவலகத்தில் இன்னொரு புகார்...

சுருக்கம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களுக்கு ஓவியா நடித்து அண்மையில் வெளியாகியுள்ள ‘90 எம்.எல்’ போன்ற படங்கள் தூண்டுதல் அளிக்கின்றன. எனவே நடிகை ஓவியாவையும், அப்படத்தின் இயக்குநர் அனிதா உதீப்பையும் கைது செய்யவேண்டும் என்று மீண்டும் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களுக்கு ஓவியா நடித்து அண்மையில் வெளியாகியுள்ள ‘90 எம்.எல்’ போன்ற படங்கள் தூண்டுதல் அளிக்கின்றன. எனவே நடிகை ஓவியாவையும், அப்படத்தின் இயக்குநர் அனிதா உதீப்பையும் கைது செய்யவேண்டும் என்று மீண்டும் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் நடித்த படம் ’90 எம்.எல்.’ அனிதா உதீப் இயக்கிய இந்த படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஓவியா மீதும் இயக்குனர் மீதும் போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் ‘90 எம்.எல்’ படத்துக்காக ஓவியா மீது நேற்று கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்னொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் அந்த புகாரை கொடுத்துள்ளார். 

அப்புகாரில்,’’பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர். முகநூல், டுவிட்டர் மூலமாக அவர்களுக்கு காதல் வலை வீசி திருமண ஆசை காட்டி அந்த பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடந்து கொண்ட விதம் மனித இனத்திற்கே அவமானம்.

தமிழகத்தில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வகையில் படங்கள் எடுக்கப்படுவது அதைவிட கேவலம். கடந்த மார்ச் 1-ந் தேதி அனிதா உதீப் இயக்கிய ’90 எம்.எல்’ படம் வெளியானது. அந்த படத்தில் நடிகை ஓவியா அருவருக்கத்தக்க வகையில் நடித்து இருந்தார். புகைப்பது, ஆண் நண்பருடன் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதான் பெண்ணியம் என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும் பெண்களை தவறாக வழி நடத்தக்கூடிய வகையிலும் 90 எம்.எல். படத்தை இயக்கிய அனிதா உதீப், அதில் நடித்த ஓவியா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்’என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவோ எதிப்புகள் வந்தபோதும் ‘90 எம்.எல்’ படத்தில் நடித்ததை நியாயப்படுத்தியே ஓவியா பேட்டிக்கள் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sara Arjun : விக்ரமின் ரீல் மகளா இது? அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் என்னமா போஸ் கொடுக்குறாங்க..
Shivani Narayanan : எல்லாமே அப்படியே தெரியுது! சேலையில் கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன் கிளிக்ஸ்