விஜய் சேதுபதியால் கலாநிதி மாறனுக்கு வந்த சிக்கல்

Published : May 09, 2020, 10:27 PM IST
விஜய் சேதுபதியால் கலாநிதி மாறனுக்கு வந்த சிக்கல்

சுருக்கம்

இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாகவும் கோவில்களில் நடக்கும் அபிஷேக முறைகளை கிண்டலடிக்கும் விதமாக விஜய் சேதுபதி பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அவர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு வருகிறது.   

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை தேர்ந்தெடுத்து, தனக்கே உரித்தான பிரத்யேக ஸ்டைலில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நல்ல திரைப்படங்களில் நடித்து, நல்ல பெயரை சம்பாதித்து  வந்த விஜய் சேதுபதி, ஒரேயொரு சர்ச்சை கருத்தை கூறி இந்து மக்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார். 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி ஒளிபரப்பான பகுதியில், கோவில்களில் கடவுள் குளிப்பதையெல்லாம் பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். ஆனால் உடைமாற்றுவதை மட்டும் காட்டுவதில்லை. குளிப்பதையே காட்டும்போது உடை மாற்றுவதையும் காட்டலாமே என இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாகவும் இந்து கோவில்களில் பூஜை முறைகளை கிண்டலடிக்கும் விதமாகவும் கருத்து தெரிவித்தார். 

விஜய் சேதுபதியின் இந்த சர்ச்சை கருத்து, இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இதையடுத்து விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு முழுவதும் பல காவல் நிலையங்களில் இந்து அமைப்பினர் புகார் அளித்துவருகின்றனர். 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி மீது மட்டுமல்லாது, அவரது அதிகப்பிரசங்கித்தனமான பேச்சை ஒளிபரப்பிய சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

குற்றாலநாதன் என்பவர், திருநெல்வேலி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், இந்துக்கள் மனம் புண்படும்படி பேசிய விஜய் சேதுபதியின் மீதும் அதை ஒளிபரப்பிய சன் டிவி நிர்வாக இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றாலநாதன் புகாரளித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
கிரேட் எஸ்கேப்... ராஜா சாப் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் ‘இந்த’ தமிழ் நடிகரா? - நல்ல வேளை அவர் நடிக்கல..!