
சிவகார்திகேயனின் "வேலைக்காரன்" படத்திற்கும் எனது "சக்க போடு போடு ராஜா" படத்திற்கும்தான் போட்டி என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
டி.வி. புரொடக்ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சக்க போடு போடு ராஜா'. இந்தப் படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், படக்குழுவினருடனான பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம், நடிகரும், தயாரிப்பாளருமான விடிவி கணேஷ், ரேபோ சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது சந்தானம், "சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' படத்திற்கு தான் `சக்க போடு போடு ராஜா' படம் போட்டியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், "விவேக், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன் என ஐந்து காமெடியன்கள் சேர்ந்து நடித்திருக்கும் இந்தப் படம் முழு காமெடி விருந்தாகவே இருக்கும்" என்றும் "அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை" என்றும் சந்தானம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.