‘அந்தப் படத்தை திரையிடக்கூடாது’... ஜெயம் ரவியின் அப்பாவை எச்சரித்த சென்னை கமிஷனர் அலுவலகம்...

Published : Dec 07, 2018, 04:32 PM ISTUpdated : Dec 07, 2018, 04:33 PM IST
‘அந்தப் படத்தை திரையிடக்கூடாது’... ஜெயம் ரவியின் அப்பாவை எச்சரித்த சென்னை கமிஷனர் அலுவலகம்...

சுருக்கம்

இந்நிலையில் போலீஸுக்கு யார் போட்டுக் கொடுத்தார்களோ தெரியவில்லை. கமிஷனர் அலுவலகம் இப்பபடத்தை  திரையிட தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு அவசர கடிதத்தை தியேட்டர் நிர்வாகத்துக்கு கமிஷனர் அலுவலகம் இன்று அனுப்பியிருக்கிறது.

வரும் ஞாயிறு மாலை 6 மணி அளவில் எம்.எம்.பிரிவியூ தியேட்டரில் திரையிடப்படுவதாக இருந்த ‘தெளிவுப்பாதையின் நீச தூரம்’ என்ற படத்தைத் திரையிடக்கூடாது என்று சென்னை கமிஷனர் அலுவலகம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகனுக்கு சொந்தமான எம்.எம்.பிரிவியூ தியேட்டர். இத்தியேட்டரில் கடந்த ஏழெட்டு வாரங்களாக சுயாதீன சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ மதுபானக் கடை’, ’ஒளி திவசத்தே களி’[மலையாளம்] போன்ற தரமான படங்களைத் திரையிட்டு வருகிறார்கள்.

இந்த வரிசையில் வரும் ஞாயிறன்று சென்சாரால் சர்டிபிகேட் மறுக்கப்பட்ட ‘தெளிவுப்பாதையின் நீச தூரம்’ என்ற படத்தை இலவசமாகத்திரையிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். பொதுமக்களிடம் தலைக்கு ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி, அர்விந்த் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் கோவை குண்டு வெடிப்பு தொடர்பான அப்பட்டமான உண்மைகளைப் போட்டு உடைத்திருப்பதாக செய்திகள் உண்டு.

இந்நிலையில் போலீஸுக்கு யார் போட்டுக் கொடுத்தார்களோ தெரியவில்லை. கமிஷனர் அலுவலகம் இப்பபடத்தை  திரையிட தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு அவசர கடிதத்தை தியேட்டர் நிர்வாகத்துக்கு கமிஷனர் அலுவலகம் இன்று அனுப்பியிருக்கிறது.

இத்திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்த ’தமிழ் ஸ்டுடியோ’ அருண் ‘ஆளும் இந்த அரசு மிக கொடூரமானது. ஞாயிறு தமிழ் ஸ்டுடியோ திரையிட இருக்கும் நண்பர் அரவிந்தனின் ’தெளிவுப்பாதையின் நீச  தூரம்’ திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று கமிசனர் அலுவலகம் M M திரையரங்கிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. இதனை எதிர்கொள்ளும் விதம் குறித்து வழக்குறைஞர்களுடன் விவாதிக்கொண்டிருக்கிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!