
இப்போது வெளிவரும் படங்களுக்கு ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க படுகிறது.
தற்போது மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு போன்ற காமெடியர்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் இந்த வருடம் முதல் எப்போதும்போல சாதாரணமான காமெடி நடிகர் என்கிற போர்வையில் இருந்து வெளியே வர வேண்டும் என கருதிய யோகி பாபு, வித்தியாசமான காமெடி வேடங்களில் மட்டுமே நடிக்க ஒற்றுக்கொள்கிறாராம்.
ரெமோ படத்தில் இவர் சிவகார்திகேயனனை சுற்றி சுற்று வந்து காதல் செய்வது போன்ற காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது, அதே போல் தற்போது இளையதளபதி விஜய் நடித்த புதிய கீதை படத்தை இயக்கிய கே.பி.ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில், கதாநாயகியாக நடித்து வரும் ஆனந்தியை சுற்றி சுற்றி வந்து காதலிக்கிறாராம் .
மேலும் இவர்கள் இருவருக்கும் இந்த படத்தில் ரொமான்ஸ் கட்சிகளும் உள்ளதாம், இந்த படத்தில் தனது நடிப்பு கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் யோகி பாபு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.