
’இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று நீங்களாகவே முடிவெடுத்து என்னை ஓரம் கட்டிவிடாதீர்கள். எல்லாக் கதாநாயகர்களுடனும் இணைந்து காமெடி வேடங்களில் நடிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்’என்று தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகர் யோகிபாபு.
தமிழில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது முன்னணி ஹீரோக்களான விஜய், ரஜினி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே யோகிபாபு ஹீரோவாக நடித்த 'தர்மபிரபு' படம் நேற்று வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல், இவர் ஹீரோவாக நடித்த கூர்கா, பன்னிக்குட்டி, ஸோம்பி போன்ற படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இந்நிலையில், தான் இதன் பின்னர் தான் ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என யோகிபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்கல் முன்னிலையில் பேசிய யோகி பாபு, ‘நான் நண்பர்களின் அன்புக்குப் பணிந்துதான் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தேனோ ஒழிய அது என்னுடைய விருப்பம் அல்ல. என்னைப் பொறுத்தவரை எல்லா ஹீரோக்கள் படங்கலிலும் காமெடியனாக நடிக்கவேண்டும். தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்திருந்து மக்களை சிரிக்கவைக்கவேண்டும் என்பதுதான். இனி காமெடி வேடத்தில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன்’என்கிறார் யோகிபாபு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.