’பிக்பாஸ்ல அந்த ஸ்ரீலங்கா பொண்ணை நினைச்சா திக்கு திக்குனு இருக்கு’...கதறும் நடிகை கஸ்தூரி...

Published : Jun 29, 2019, 11:33 AM IST
’பிக்பாஸ்ல அந்த ஸ்ரீலங்கா பொண்ணை நினைச்சா திக்கு திக்குனு இருக்கு’...கதறும் நடிகை கஸ்தூரி...

சுருக்கம்

உலகின் சகல சப்ஜெக்ட்டுகளின் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் கொட்டித் தீர்த்துவரும் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியை மட்டும் விட்டுவைப்பாரா என்ன? கடந்த 3 தினங்களாக நடந்து அழுகாச்சி எபிசோட் குறித்து கமெண்ட் அடித்துள்ள அவர்,...போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை  பிழியபோறீங்க... இப்போவே யாரு எவ்வளோ  சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.

ஏற்கனவே மோகன் வைத்யா, சித்தப்பு சரவணன், ரேஷ்மா ஆகியோரின் அழுகைக் கதைகள் பல லட்சக்கணக்கான விஜய் டிவி ரசிகர்களின் கர்சீப்பை நனைத்திருந்த நிலையில் நேற்று கவின் தன் கண்ணீர்க் கதையை அவிழ்த்துவிட்டிருந்தார். இது பற்றி கமெண்ட் அடித்த கஸ்தூரியக்கா,...கஷ்டப்படும்போது சொந்தகாரங்க ஒண்ணும் செய்யல... எல்லாமே நண்பர்கள்தான்’ என்று கவின் அழத்துவங்க,...என் இனமடா நீ  ராசா.  உதவி செய்யலேன்னா கூட  பரவாயில்ல, துரோகம் செய்யாம  விட்டார்களே, நீ கொடுத்துவச்சவன் ! என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.

மேலும் இந்த பிக்பாஸின் அழுகாச்சி ஸ்ட்ண்ட் குறித்து கமெண்ட் அடித்த அவர்,...போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை  பிழியபோறீங்க... இப்போவே யாரு எவ்வளோ  சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும்  சோகத்தை பிழியணும்னு  அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு...என்றும் ,...இதே சேனல் ல  "கதையல்ல.. னு" சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா  அழவைப்பாங்க...  அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக்  !என்று விஜய் டிவியைக் கதறவிட்டிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!