பீர் குடித்துவிட்டு ஓவராகக் குண்டானதால் படத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட தமிழ் நடிகை...

Published : Jun 29, 2019, 10:58 AM IST
பீர் குடித்துவிட்டு ஓவராகக் குண்டானதால் படத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட தமிழ் நடிகை...

சுருக்கம்

சுமார் ஒரு மாதகாலத்துக்கு நான் ஸ்டாப்பாக பீர் குடித்து, சிறுத்தைக்குட்டி போல் இருந்தவர் பருத்த குட்டியாக மாறியதால் படத்திலிருந்தே தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். தகவல் உபயமும் சாட்சாத் அந்த நடிகையேதான்.  

சுமார் ஒரு மாதகாலத்துக்கு நான் ஸ்டாப்பாக பீர் குடித்து, சிறுத்தைக்குட்டி போல் இருந்தவர் பருத்த குட்டியாக மாறியதால் படத்திலிருந்தே தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். தகவல் உபயமும் சாட்சாத் அந்த நடிகையேதான்.

தமிழில் ’தோனி’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’, ’வெற்றி செல்வன்’ ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. பா.ரஞிச்த்தின் ’கபாலி’ படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து மேலும் பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தவிர செக்ஸ் கண்டெண்ட் கொண்ட நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் தனக்குத் தோணும்போது மட்டும் காதலரை லண்டன் சென்று சந்தித்துவிட்டுத் திரும்புவார். அப்படி ஒரு முறை கணவரை சந்திக்க லண்டன் சென்றபோது அளவுக்கு மீறிக் குடித்து ஒரு படத்தை இழந்த கதையை தற்போது வெளியிட்டுள்ளார் ராதிகா ஆப்தே.

இது குறித்துப்பேசிய அவர்,’ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் என் கணவரைச் சந்திப்பதற்காக வெளிநாடு சென்று இருந்தேன். அப்போது அந்த மாதம் முழுவதும்  அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன்.இதனால் எனது உடல் எடை கணிசமாக கூடியது. அஅந்த பயணம் முடிந்து திரும்பவும் மும்பை வந்தபோது என் தோற்றத்தை பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியானார். படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார். நான் சில நாட்களில் எடையை குறைத்து விடுகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதன்பிறகு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்’என்று தனது குடிப்பழக்கம் குறித்து எவ்வித சங்கோஜமும் இல்லாமல் ஓப்பன் பண்ணுகிறார் ராதிகா ஆப்தே.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!