மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்!

Published : Mar 06, 2019, 06:53 PM IST
மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்!

சுருக்கம்

எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் ”டைப்பிஸ்ட்” கோபு.   

எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் ”டைப்பிஸ்ட்” கோபு. 

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும், பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.  தற்போது  82 வயதாகும் இவர், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டார். 

திரைப்பட வாய்ப்புகள் வரிசை கட்டி வந்த போதிலும், நாடகத்தின் மீது உள்ள ஈர்ப்பால் சுமார் 600-க்கும் அதிகமான மேடை நாடகங்களை நடத்தியுள்ளார்.1998-இல் ‘ரெய்ஸ் ஆன்’ என்ற நாடகத்தை மீண்டும் நடத்தினார். இந்த நாடகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, இராயப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவருக்கு திடீர் என உடல்நிலை மோசமானதால்,  இவரை குடும்பத்தினர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் டைப்பிஸ்ட் கோபு, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையறிந்து பிரபலங்கள் பலர் இவருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?