"பிக்பாஸில் ஜூலியே வெல்வார்..." அடித்து சொல்கிறார் காமெடி நடிகர் சதீஷ்

 
Published : Jul 07, 2017, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"பிக்பாஸில்  ஜூலியே வெல்வார்..." அடித்து சொல்கிறார் காமெடி நடிகர் சதீஷ்

சுருக்கம்

Comedy actor sathish saying that julie only going to win in big boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜுலியானா தான் வெற்றி பெறுவார் என நடிகர் சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

ஹிந்தியில் ஹிட்டடித்த பிக் பாஸ்நிகழ்ச்சித்தான் தற்போது கமல் ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சித்தான் , இப்போதைக்கு செம ட்ரெண்டிங் டாபிக்.

இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் சமூக வலைதள வாசிகளால் பெரிதும் வருத்தெடுக்கப்பட்டு வருகிறது. இப்படி கலாய்ப்பதால் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ளது.

டி.ஆர்.பி ரெட்டிங்கை அதிகபடுத்த பல்வேறு யுக்தியை கையாண்டு வருகிறது.  அடுத்தடுத்து நடக்கும் பரபரப்பு விறு விறுப்பு என பார்வயாளர்களை   பரபரப்புடனே வைத்துள்ளனர்.

தினமும் யாராவது அழுவது அல்லது சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனாலேயே ரசிகர்களுக்கு நிகழ்ச்சி மேல் அதிக எதிர்ப்பார்ப்பு  இருக்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்ன பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதனாலயே வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

என்ன தான் இந்த நிகழ்ச்சி நன்றாக இல்லை என சிலர் கூறினாலும் நிகழ்ச்சியை  யாரும் பார்க்காமல் இல்லை, .

இந்நிலையில் விஜய் டிவி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு உள்ளது. இதுவரை 3.6 கோடி பேர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

15 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீ மற்றும் நடிகை அனுயா வெளியேற்றபட்ட நிலையில் தற்போது 13 பேர் உள்ளனர். வாரம் ஒரு தலைவர்கள் என்ற நிலையில், இந்த வார தலைவராக காயத்ரி ரகுராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜுலியானா தான் வெற்றி பெறுவார், காரணம்  ஆர்த்தி மற்றும் காயத்ரி என ட்வீட்டியுள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?