இந்தூரில் ரன்வீர் சிங்கிற்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி...நிர்வாண போஸால் அடுத்தடுத்த சிக்கலில் சிக்கிய பிரபலம்.

Published : Jul 26, 2022, 03:34 PM ISTUpdated : Jul 26, 2022, 03:37 PM IST
இந்தூரில் ரன்வீர் சிங்கிற்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி...நிர்வாண போஸால் அடுத்தடுத்த சிக்கலில் சிக்கிய பிரபலம்.

சுருக்கம்

டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீருக்கு உடை வழங்கும் இயக்கம் ஒன்று தோன்றியுள்ளது. ஒரு குழு ஆடை நன்கொடை இயக்கத்தை துவங்கி தெருவில் உள்ள மேசையில் ரன்வீர் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியை வைத்துள்ளது.

வித்யாசமான உடை அலங்கரத்திற்கு பெயர் போன பிரபல நடிகை தீபிகா படுகோனின் கணவரான நடிகர் ரன்வீர் சிங் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வந்தவர். சமீபத்தில் இவர் கொடுத்தபோஸ் இவரது இமேஜை டோட்டலாக காலி செய்து விட்டது.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரன்வீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது 

ஒட்டு துணிகூட அணியாமல் நிர்வாண போஸ் கொடுத்திருந்தால் ரன்வீர் சிங். அந்த போஸ்டுடன் பர்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிர்வாண போஸ் களை கொடுத்ததாகவும் எழுதியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...சிம்புவுக்கு கிடைக்காத சிறப்பை அறிமுக படத்திலேயே தட்டி தூக்கிய தி லெஜண்ட்.. என்ன விஷயம் தெரியுமா?

 

மேலும் செய்திகளுக்கு...பாலிவுட் பிரபலம் கத்ரீனா ஃகைப் - விக்கி கௌசல் ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

முன்னதாக பிரபல பத்திரிக்கைக்கு இது போன்ற போஸ் கொடுத்திருந்தார் ரன்வீர். இதனால் பரபரப்பு பற்றி கொண்டது. பலரும் எதிர்ப்பு தெரிவிக்க நடிகை மிமிக் சக்கரவர்த்தி இதை நாங்கள் செய்திருந்தால் சும்மா இருப்பீர்களா? சும்மா இருப்பீர்களா? என்பது போன்ற கேள்வியும் எழுப்பி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...அடுத்தடுத்து மண்ணை கவ்வும் பாலிவுட் படங்கள்..தொடர் தோல்வியால் துவண்டுள்ள சூப்பர் ஹீரோஸ்!

இதை தொடர்ந்து ரன்வீர் சிங்கின் மீது மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் பெண்களின் மனம் புண்படும் விதமாக ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படம் எடுத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து நடிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீருக்கு உடை வழங்கும் இயக்கம் ஒன்று தோன்றியுள்ளது. ஒரு குழு ஆடை நன்கொடை இயக்கத்தை துவங்கி தெருவில் உள்ள மேசையில் ரன்வீர் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியை வைத்துள்ளது. மக்கள் தங்கள் ஆடைகளை நன்கொடையாக வழங்குவதை அந்த குழு வீடியோவும் எடுத்துள்ளது. அந்த பெட்டியில் ரன்வீரின் நிர்வாண போஸ் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டு அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!