மாரடைப்பு ஏற்பட்டு நடு ரோட்டில் இறந்து கிடந்த ஒளிப்பதிவார்...! நான்கு நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அவலம்...!

First Published Apr 1, 2018, 2:31 PM IST
Highlights
cinematographer sureshkumar death


எம்.ஜி.ஆர், சிவாஜி கணேஷன் ஆகிய பிரபல சினிமா நட்சத்திரங்கள் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், திருச்சி ஆனா ரூனா. இவரை தொடர்ந்து இவருடைய மகன்கள் 'ரமேஷ் குமார்' , ,மற்றும் 'சுரேஷ் குமார்' ஆகியோரும் சினிமா ஒளிப்பதிவாலர்கலாவே திரைத்துறையில் அறிமுகமாகினர். 

ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார்:

ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார், 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'என் தமிழ் என் மக்கள்' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர். ஒளிப்பதிவாளாராக இருந்துக்கொண்டிருக்கும் பலருக்கு வழி காட்டிய குரு என்றும் கூறலால். இவர் அப்போதே புனே திரைப்படக் கல்லூரியில் பயின்று தங்க மெடல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விபத்து:

சிறந்த ஒளிப்பதிவாளர் என்று பெயரெடுத்த இவருடைய வாழ்கையை ஒரேதடியாக திருப்பி போட்டது இவருக்கு நடந்த விபத்து. மிகவும் சீரியஸ் ஆன நிலைக்கு சென்ற இவரை எப்படியோ காப்பாற்றி விட்டனர். 

இருப்பினும் இந்த விபத்துக்கு பின் இவருக்கு பட வாய்புகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இவர் திருமணமும் செய்துக்கொள்ளவில்லை. 

பட வாய்புகள் இல்லாதலால், குறும்படம் மற்றும் டாக்குமென்ரி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். 

மாரடைப்பு:

இந்நிலையில் இவர் தனியாக குரோம்பேட்டையில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி முக்கிய வேலை காரணமாக கோடம்பாக்கம் வந்து விட்டு மீண்டும் பேருந்தில் குரோம்பேட்டைக்கு சென்றுள்ளார். 

இவர் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்றபோது இவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு நடு ரோட்டில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். ஆனால் இவரை கடந்து சென்ற பலர் இவரை அடையாளம் தெரியாததால் கண்டுக்கொள்ள வில்லை. 

மேலும், மர்ம நபர்கள் சிலர் இவரை ஓரமாக தூக்கி சென்று இவர் வைத்திருந்து எடிஎம் கார்டு, செல் போன், ஆகியவற்றை இவரிடம் இருந்து திருடி சென்றுள்ளனர். 

இவர் அனாதையாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குரோம்பேட்டை பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் இவரை அரசு மருத்துவமனை பிண கிடங்கிற்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வந்துள்ளனர். மேலும் சுரேஷ் குமார் வாடகை இருந்த வீட்டின் உரிமையாளர் போலிஸ் நிலையத்தில் சுரேஷ் குமார் கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என புகார் கொடுக்கவே இறந்தவர் பிரபல ஒளிப்பதிவாளர் என்பது தெரியவந்துள்ளது.

பின் இவருடைய உடல் அவருடைய சகோதரர் மட்டும் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டு அவருக்கு நேற்று இறுதி சடங்குகள் நடந்துள்ளது இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

click me!