
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்னேகர். சிறந்த நடிகர் மட்டும் இன்றி இரண்டு முறை கலிபோர்னிய மாகாணத்தின் கவர்னராக பதவி வகித்தவர்.
இவருக்கு இதயத்தில் உள்ள வால்வில் சிறு பிரச்சனை இருந்துள்ளது, இதன் காரணமாக சில நாட்கள் இவர் மூச்சு தினரலால் அவதி பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு இந்த பிரச்சனைக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீடர்ஸ் - சினாஸ் மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. ஏற்கனவே இவருக்கு இது போன்ற ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அர்னால்டின் நிலை குறித்து தெரிவித்துள்ளதாக கூறியுள்ள அவருடைய செய்தி தொடர்பாளர் டேனியல் கெட்செல், நலமுடன் உள்ளதாகவும் இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருக்க கூறி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இவருடைய உடல் நிலை குறித்து பிரபலங்கள் பலர் விசாரித்து வருகிறனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.