
இந்த 2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் பலராலும், மறந்து விட முடியாது. காரணம் பல திறமையான கலைஞர்களை இழந்துள்ளோம். பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அணைத்து திரையுலக ரசிகர்களும் தங்கள் மனம் கவர்ந்த சில பிரபலங்களை இழந்துள்ளனர்.
அந்த வகையில் கடந்த மாதம், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் இறந்த சோகத்தில் இருந்தே இன்னும் பல ரசிகர்கள் வெளியே வராத நிலையில், தற்போது தமிழ் திரையுலகில் பலருக்கும் பரிச்சியமான, சிட்டி ஸ்ரீனிவாஸ் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த விளம்பர வடிவமைப்பாளர்களில் ஒருவர் சிட்டி ஸ்ரீநிவாஸ். இவரை பலரும் செல்லமாக சிட்டி என்றே அழைப்பார்கள். இவர் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் காலமானார். அவரது இறுதி சடங்குகளை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று நடைபெற்றது.
இவருக்கு தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த பல தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் மூலம் இவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.