தனுஷ் வரிகள் எழுதி பாடியுள்ல சிட்டுக்குருவி காதல் சோகப்பாடல் மாறன் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. இந்த வரிகளை தனுஷ் தனது மனைவியின் பிரிவை நினைத்து எழுதியதாகவே ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
காதல் பறவைகளாய் சுற்றித்திரிந்த தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிகளின் விவாகரத்து முடிவு அவர்களது குடும்பத்தாரை மட்டுமல்லாமல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..வீட்டில் மட்டுமல்லாமல் தொழிலும் தனுஷுக்கு தோள் கொடுத்து வந்த ஐஸ்வர்யாவின் பிரிவு பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது..வளர்ந்த இரு பிள்ளைகள் இருக்கையில் தம்பதியினர் பிரியும் முடிவெடுத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என இரு குடும்பத்தார் கூறியும் தனுஷ்- ஐஸ்வர்யா தங்களது முடிவிலிருந்து பின் வாங்குவதாக தெரியவில்லை..
பின்னர் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அட்வைஸ் காரணமாக ஐஸ்வர்யாவை பிரியும் முடிவை தனுஷ் தளர்த்தியுள்ளதாக குரபப்டுகிறது. அதன் சாயலாக சமீபத்தில் மாறன் படத்திலிருந்து வெளியான வீடியோ சாங்கில் தனது மனைவிக்காக சில வார்த்தைகளை தனுஷ் சேர்க்கும்படி கோரியிருந்தாராம் அதாவது இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பாடலின் நடுவே வரும், ”ஏன் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா.. நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூமா..” என்ற வரிகள் தான். இந்த பாடலுக்கு பிறகு விரைவில் இருவரும் க்ரீன் சிக்னல் காட்டி இணைந்து விடுவார்கள் என கருதியது பொய்த்து போனது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா காதல் ஒருவரோடு நின்றுவிட கூடாது. நான் என் பெற்றோரையும் , பிள்ளைகளையும் காதலிக்கிறேன் என்கிறார். ஆனால் தனுஷ் குறித்த வர எந்த இடித்திலும் பேசவில்லை..
இந்நிலையில் மாறன் படத்திலிருந்து தனுஷ் எழுதி பாடியுள்ள சிட்டுக்குருவி பாடல் வெளியாகியுள்ளது. அந்த பாடலில் காதலியை நினைந்து ஏங்கும் காதலனின் சோக கீதம் இடம்பிடித்துள்ளது. இந்த வரிகளை தனுஷ் தனது மனைவியின் பிரிவை நினைத்து எழுதியதாகவே ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பாடலுக்கு ஜீ வி இசையமைத்துள்ளார். மாறன் படத்தை துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற மார்ச் 11-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.