அஜித்துக்கு கை கொடுத்த கார்த்தி..பிரபலங்கள் பின்வாங்க..நட்புக்காக தோள் கொடுத்த நெகிழ்ச்சி தருணம்..

Kanmani P   | Asianet News
Published : Mar 07, 2022, 08:18 PM ISTUpdated : Mar 07, 2022, 08:22 PM IST
அஜித்துக்கு கை கொடுத்த கார்த்தி..பிரபலங்கள் பின்வாங்க..நட்புக்காக தோள் கொடுத்த நெகிழ்ச்சி தருணம்..

சுருக்கம்

முதலில் கார்த்திக் நடித்திருந்த கெஸ்ட் ரோலில் நடிக்க அப்போது முன்னணி நாயகர்கள் பலரிடம் இயக்குனர் சென்றுள்ளார். ஆனால் இளம் நடிகரான அஜித் படத்தில் நடித்தா தங்களது இமேஜ் கெட்டுவிடும் என பலரும் ஒதுங்க ..இந்த ரோலில் நடிக்க கார்த்திக் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அஜித்தை காதல் மன்னனாக வலம் வந்த கலகட்டமது..வளர்ந்து வரும் இளம் நடிகராக அஜித் நடித்து ஹிட் அடித்த படங்களில் ஒன்றுதான்  ஆனந்த பூங்காற்றே. கடந்த  1999 இல் வெளிவந்த இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மீனாவும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் கார்த்திக் நடித்தார். இந்தப் படத்தை ராஜ் கபூர் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் சப்போர்டிங் கேரக்டரில் மாளவிகா, விஜயகுமார், ராசன் பி.தேவ், மணிவண்ணன், வடிவேலு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். மீனாட்சி மீனாட்சி என்ற பாடலை பொன்னியின் செல்வன் இயற்றினார். ஏனைய பாடல்களை வைரமுத்து இயற்றினார்.இந்த படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் மிகப்பிரபலமானவை.

மேலும் செய்திகளுக்கு..கிக் ஏற்றும் பூஜா ஹெக்டே.. குட்டை உடையில் தொடை அழகு தெரிய பீஸ்ட் நாயகி.. 

50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கு வரவேற்பை பெற்ற இந்த படத்தில் கார்த்திக் கெஸ்ட் ரோலில் வந்திருப்பார். உண்மையில் கார்த்திக் வரும் சீன்கள் தான் படத்தின் திருப்பு முனையே. கார்த்திக் கொல்லப்படுவதால் வேதனையடையும் நாயகி மீனா கார்த்தியின் குழந்தையுடன் விதவை கோலத்தில் ஊரைவிட்டு கிளம்பி விடுகிறார். அப்போது மீனாவை பெண்பார்க்க வரும் நாயகன் அஜித் இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மீனாவை மனமாற்றம் செய்து மணமுடிக்கும் கதைக்களம் ஆனந்த பூங்காற்று. 

முதலில் கார்த்திக் நடித்திருந்த கெஸ்ட் ரோலில் நடிக்க அப்போது முன்னணி நாயகர்கள் பலரிடம் இயக்குனர் சென்றுள்ளார். ஆனால் இளம் நடிகரான அஜித் படத்தில் நடித்தா தங்களது இமேஜ் கெட்டுவிடும் என பலரும் ஒதுங்க ..இந்த ரோலில் நடிக்க கார்த்திக் சம்மதம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் அஜித் கெஸ்ட் ரோல் செய்திருப்பார்..இந்த நட்பும் அஜித் வளர்ந்து முன்னணி நடிகராக வேண்டும் என்கிற எண்ணத்தின் காரணமாகவே கார்த்திக் அஜித் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. கார்த்திக்கின் கெஸ்ட் ரோல் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று சொல்வதும் மிகையாகாது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்