#BREAKING சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை... கணவர் ஹேம்நாத் அதிரடி கைது....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 15, 2020, 12:01 AM IST
#BREAKING சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை... கணவர் ஹேம்நாத் அதிரடி கைது....!

சுருக்கம்

இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் சற்று நேரத்திற்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பாக நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்த நிலையில், சித்ராவுடன் தங்கியிருந்த அவருடைய கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் ஹேமந்திற்கும் சித்ராவிற்கும் இடையே ஏற்கனவே பதிவு திருமணம் நடந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணையை தொடங்கியுள்ளார். சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ் அக்கா சரஸ்வதி, அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. 

இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் சற்று நேரத்திற்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 15 நாட்கள் காவலில் வைத்து ஹேம்நாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை தத்தெடுக்க மறுத்தது ஏன்? முத்துவிடம் மூடிமறைத்த உண்மையை சீதாவிடம் போட்டுடைத்த மீனா - சிறகடிக்க ஆசை
சவுக்கு சங்கர் கைதுக்கு நான் தான் காரணம்..! தானாக முன்வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்த சினிமா தயாரிப்பாளர்