
சமந்தா - நாக சைதன்யா விவாகரத்தில் தொடங்கியது சினிமா பிரபலங்களின் விவாகரத்து படலங்கள். முதலில் சமந்தா விவாகரத்து அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, தன் பெயருக்கு பின்னால் இருந்த நாக சைதன்யா, நாகார்ஜுனாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கினார். அப்போது தான் சமந்தா விவாகரத்து செய்யப்போவதாக பேச்சுகள் தொடங்கின. பிறகு சில வாரங்களில் அது அப்படியே நடந்தது அனைவரும் அறிந்ததே. நேற்று இரவு திடீரென வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது தனுஷ் - ஐஷ்வர்யா ரஜினிகாந்த்தின் விவாகரத்து கடிதம். காலை முதலே சூப்பர் ஸ்டார் வீட்டில் இல்லை, ஒருவேளை உடல்நல கோளாரா என்று பேசப்பட்ட நிலையில் தான், அவர் மனம் நொந்து எங்கோ நிம்மதி தேடி சென்றார் என்பதை உணர்த்தும் விதமாக மகளின் விவாகரத்து முடிவு வெளியானது. இப்போது அடுத்ததாக ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா விவாகரத்து செய்யப்போவதா செய்தி வந்துள்ளது.
சமந்தாவை போலவே ஸ்ரீஜாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை நீக்கியுள்ளார். நடிகர் கல்யாண் தேவ் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்த ஸ்ரீஜாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்ஸ்டாகிராமில் கணவர் பெயரை இணைத்து ஸ்ரீஜா கல்யாண் என்று வைத்திருந்தார். இப்போது அதை நீக்கி, சிரஞ்சீவியின் குடும்ப பெயரான கொனிடேலா என்பதை சேர்த்துள்ளார். இதனால் அவர் கணவரை பிரிய தயாராகிவிட்டதாக செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால் அந்த செய்திகளை சிரஞ்சீவி குடும்பத்தில் யாரும் மறுக்கவில்லை.
ஸ்ரீஜாவுக்கு கல்யாண் தேவுடன் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் முதலில் சிரஞ்சீவியின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். பின்னர் கல்யாண் தேவை 2016ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இப்போது அவரையும் பிரியப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.