
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கை கொடுக்கும் வகையில், பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை முதல்வர் நிதிக்காக கொடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே பிரபல தெலுங்கு நடிகர்கள் பவன் கல்யாண், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு ஒரு கோடியையும், பிரதமர் நிதிக்கு ஒரு கோடி என இரண்டு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
இவரை தொடர்ந்து பிரபல நடிகர் மகேஷ் பாபு முதல்வரின் நிதிக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கி, உதவி செய்ய முடிந்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை தவறாமல் செய்யுங்கள் அது மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என தெரிவித்தார்.
இவரை தொடர்ந்து பிரபல நடிகரும், அரசியல் வாதியுமான சிரஞ்சீவி ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வரின் நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
அதே போல் அவருடைய மகன், ராம் சரண் 70 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். பிரபலங்களின் இந்த செயலுக்கு ஆந்திரா மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.