“படிச்சவங்க தானே, உங்களுக்கு அறிவே இல்லையா?”... மழலை மொழியில் வறுத்தெடுக்கும் பேபி மானஸ்வி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 26, 2020, 05:35 PM IST
“படிச்சவங்க தானே, உங்களுக்கு அறிவே இல்லையா?”... மழலை மொழியில் வறுத்தெடுக்கும் பேபி மானஸ்வி...!

சுருக்கம்

அதில் ஊரடங்கை மதிக்காமல் கார், பைக்கில் ஜாலியாக சாகச பயணம் செய்பவர்களை தனது மழலை மொழியில் வறுத்தெடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக  இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. ஆனால் அதை பலரும் கேட்பதாக தெரியவில்லை. ஏதோ பண்டிகை கால விடுமுறை போல கொண்டாட்டத்துடன் பைக்கில் ஏறி ஊர் சுற்றி வருகின்றனர். 

இதையும் படிங்க: ப்பா என்னா இடுப்பு... ரம்யா பாண்டியனுக்கே டப் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்...அந்த இடம் தெரிய பளீச் போஸ்...!

வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்... திரைப்பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்த பேபி மானஸ்வி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஊரடங்கை மதிக்காமல் கார், பைக்கில் ஜாலியாக சாகச பயணம் செய்பவர்களை தனது மழலை மொழியில் வறுத்தெடுத்துள்ளார்.

"பத்திரிகை, டிவி, ஆர்ட்டிஸ்ட் என எல்லாரும் சொல்றாங்க. ஒரு தடவ சொன்ன நீங்க கேட்கவே மாட்டிங்களா?. வெளியே போவீங்க, எங்கயாவது தொட்டுட்டு வந்து, வேற யாருக்காவது பரப்புவீர்கள், அது இன்னொருவருக்கு பரவும். நீங்க வெளியில் போகாமல் இருந்தால் தானே கொரோனா குறையும். அதன் பிறகு தான் நாம் எல்லா இடத்திற்கும் போக முடியும். உங்களால் ஆபீஸ் போக முடியும், என்னாலும் ஸ்கூல் போக முடியும்"

இதையும் படிங்க: இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா பரப்பினாரா பாடகி கனிகா கபூர் ?... வைரலாகும் பகீர் போட்டோ...!

"மனசுக்குள்ள கொரோனா குறையனு, குறையனும்னு வேண்டினால் மட்டும் போதாது. அதற்கு வெளியில் போகாமல் இருக்கனும். நான் டிவியில் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். குடும்பம், குடும்பமா கார், பைக்ல வெளியே போறீங்க.  அவர்களை போகவேண்டாம் என கையெடுத்து கும்பிடுகிறார்கள். நீங்க வெளிய போகாமல் இருந்தால் கிருமி எல்லாம் மனிதர்கள் எங்கேன்னு தேடி, தேடியே காணாமல் போயிடும்”

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

என்ன மாதிரி குட்டி குழந்தைங்க எல்லாம் எப்போ ஸ்கூலுக்கு போறது. நீங்க வெளிய போகாமல் இருந்தால் தானே எல்லா பிரச்சனையும் குறையும். இதையெல்லாம் உங்களுக்கு தெரியாதா?... எல்லாரும் படிச்சவங்க தானே... ஏன் இப்படி பண்றீங்க. உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா?" என்று தனது மழலை மொழியில் பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!