பாடகி சின்மயிக்கு ஆப்பு !! தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் !

By Selvanayagam PFirst Published Nov 17, 2018, 9:52 PM IST
Highlights

மீ டூ முவ்மெண்ட் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

கடந்த மாதம் தமிழ் திரையுலகு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியவர் பாடகி சின்மயி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகி சின்மயி கொளுத்திக் போட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்மயியைத் தொடர்ந்து மேலும் ஏராளமான பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார்கள் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து பல நடிகர்கள் மீது நடிகைகள் மீ டூ மூலம் புகார்கள் கொடுத்தனர்,

பாலியல் தொல்லை தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இருப்பதால் வைரமுத்து மீது புகார் அளிக்கப் போவதாக சின்மயி தெரிவித்திருந்தார். அதே போல் வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்துவும் தெரிவித்திருந்தார்.

சர்ச்சையைக் கிளப்பிய இந்த சம்பவம் அரசியல் மற்றும் கஜா புயல் போன்ற நிகழ்வுகளால் கடந்த 3 வாரங்களாக மறக்கப்பட்டிருந்து. இந்நிலையில் பாடகி சின்மயி , தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாடகி சின்மயி திரைப்படங்களில் பாடுவதைவிட நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பதன் மூலம் தான் அதிகமாக சம்பாதித்து வந்தார். இந்நிலையில் அவர் தென்னிந்திய டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!