அரசியல் வி.வி.ஐ.பி -யின் பெயரை சொல்லியே மிரட்டி வந்த வைரமுத்து..! பட்டுன்னு போட்டுடைத்த சின்மயி..!

By thenmozhi gFirst Published Oct 11, 2018, 6:01 PM IST
Highlights

தானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என்று பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அடுத்த நொடியே, இந்த பிரச்சனை பெரிய அளவிற்கு சென்று உள்ளது. அதில் குறிப்பாக #metoo என்ற ஹேஷ்டேக் செய்து ட்விட்டர் பக்கத்தில் ரிட்வீட் செய்து உள்ளனர்.

தானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என்று பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அடுத்த நொடியே, இந்த பிரச்சனை பெரிய அளவிற்கு சென்று உள்ளது. அதில் குறிப்பாக #metoo என்ற ஹேஷ்டேக் செய்து ட்விட்டர் பக்கத்தில் ரிடீவீட் செய்து உள்ளனர்.

இதற்கிடையில் சின்மயிக்கு ஆதரவாக நடிகர் சித்தார்த், சமந்தா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் ஆதரவு குரல் கொடுத்கு உள்ளனர். இந்நிலையில் வைரமுத்து பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

வைரமுத்துக்கு முக்கிய அரசியல் கட்சியுடன்  இருந்து வந்த நெருக்கம், அரசியல் செல்வாக்கு இவற்றை பயன்படுத்தி இளம் பெண்களை  தன் கவிதையாலும், அரசியல் செல்வாக்கு பேச்சாலும் மடக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு தெரிந்து 2005 or 2006 இருக்கும் சுவிட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காக சென்று இருந்தோம்..அப்போது என்னுடன் என் அம்மாவும் வந்து இருந்தார்..கச்சேரி முடிந்த பின்பு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், என்னையும் என் அம்மாவையும் காத்திருக்க செய்தார் .. நான் எதற்காக என்று கேட்டேன். அப்போது வைரமுத்து இருக்கும் ஓட்டலுக்கு செல்லுங்கள் அவருக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு  கொடுங்கள் என எங்களிடம் தெரிவித்து  இருந்தார்.

அதற்கு நான் மறுப்பு தெரிவித்த உடனே அடுத்த விமானத்தில் டிக்கெட் போட்டு கிளம்ப வைத்துவிட்டனர். இதன்பின், சில வருடங்களுக்கு பிறகு அவர் எழுதிய ஒரு புத்தக வெளியீட்டிற்கு என்னை அழைத்து பாட சொல்லி இருந்தார் . அதற்கு நான் மறுப்பு தெரிவித்து இருந்தேன்..அப்போது, ஒரு அரசியல் தலைவர் பெயர் குறிப்பிட்டு  இவரை பற்றி நீ தரக்குறைவாக பேசினாய் என அவரிடம் கூறுவேன் என என்னை மிரட்டினார். இது போன்ற காரணத்தினால் தான், பல நேரங்களில் உண்மையை சொல்ல முடியாமல் போகிறது என அவர் தெரிவித்து உள்ளார் 

பாடகி சின்மயிக்கு, சினி துறை மட்டுமின்றி பொதுவாகவே ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.  

click me!