சேரப்பா இயக்கும் விஜய் சேதுபதி படத்தின் கதாநாயகியாகக் கமிட் ஆகும் லாஸ்லியா?...கதி கலங்கிய கவின்...

Published : Sep 02, 2019, 04:41 PM IST
சேரப்பா  இயக்கும் விஜய் சேதுபதி படத்தின் கதாநாயகியாகக் கமிட் ஆகும் லாஸ்லியா?...கதி கலங்கிய கவின்...

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்துப் படம் இயக்கப்போகும் ரகசியத்தை அந்த இல்லத்தில் வைத்தே சேரன் ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தில் அநேகமாக வி.சே.வின் ஜோடியாக அவரது செல்ல மகள் லாஸ்லியாவே நடிக்கக்கூடும் என்று இப்போதைக்கு நம்பியே ஆகவேண்டிய செய்தி நடமாடுகிறது.  

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்துப் படம் இயக்கப்போகும் ரகசியத்தை அந்த இல்லத்தில் வைத்தே சேரன் ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தில் அநேகமாக வி.சே.வின் ஜோடியாக அவரது செல்ல மகள் லாஸ்லியாவே நடிக்கக்கூடும் என்று இப்போதைக்கு நம்பியே ஆகவேண்டிய செய்தி நடமாடுகிறது.

இது பல வருடங்களாக அடிபட்டு வரும் செய்தி என்றாலும், நேற்று(செப்டம்பர் 1) நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில், இயக்குநர் சேரன் விஜய் சேதுபதியை இயக்கப்போகும் படம் குறித்த தகவலை தெரிவித்தார்.பிக்பாஸ் மூன்றாவது சீஸன் 70வது நாளைக் கடந்து முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சேரன், லாஸ்லியா, கவின், தர்ஷன், முகென், வனிதா, சாண்டி, ஷெரின் ஆகிய 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது. கேள்வி கேட்கும் அந்த ஒருவர், ஒட்டுமொத்த பார்வையாளர்களின் பிரதிநிதியாக தனது கேள்வியை முன்வைப்பார்.

அப்படி இயக்குநர் சேரனிடம் கேள்வி கேட்ட ஒரு பெண், “பிக் பாஸ்க்கு பிறகு, திரைத்துரையில் உங்கள் அடுத்த நகர்வு எதுவாக இருக்கும்?” எனக் கேட்டுள்ளார். அப்போது இக்கேள்வியை ரசித்த கமல்ஹாசன், ‘இது கேள்வியல்ல, வாழ்த்து’ என தனது பாணியில் சொல்லி சிரித்தார்.பார்வையாளரின் கேள்விக்கு பதிலளித்த சேரன், “நிச்சயம் எனது ‘கம்பேக்’ ஒரு ‘ஸ்ட்ராங்கான கம்பேக்’ ஆகத் தானிருக்கும். அதற்கான பேச்சுவார்த்தையை முடித்து விட்டுத்தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே நுழைந்தேன். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளேன். வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்”என்று மறைக்காமல் சொன்னார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி நடந்த நிகழ்வில், இயக்குநர் சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதற்காக நுழைந்தேன் என்ற காரணத்தை கூறும் போது, விஜய் சேதுபதியின் மூலமாகத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியே தெரியும். அவரால் தான் உள்ளேயே நுழைந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறையினர் மனநிலையை நான் அறிய முயற்சித்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.இந்த நிலையில், விஜய் சேதுபதியுடன் இணையும் படத்தை அறிவித்த அவர் இன்னும் ஓரிரு தினங்களில் அப்பட நாயகி லாஸ்லியாதான் என்று அறிவிக்கக்கூடும். இதனால்தான் கவினின் காதலை லாஸ்லியா ஏற்கக்கூடாதென்றும் சேரப்பா நினைக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி