
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று மாடல் அழகியான மீரா மிதுன் 16வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளே பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக கூடி அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது, சாக்ஷி தனக்கு பொங்கல் பிடிக்காது என தெரிவிக்கிறார். அப்போது மற்ற போட்டியாளர்கள் உங்களுக்கு பிடிக்காது என்றால் தனித்தனியாக செய்ய முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர்.
அப்போது, வனிதா விஜயகுமார் பொங்கல் உங்களுக்கு பிடிக்காதா? அல்லது உங்களுக்கு ஒத்துக்காதா? என கேள்வி எழுப்புகிறார். அதற்கு இல்லை... எனக்கு பொங்கல் பிடிக்காது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் நான் சாப்பிட்டேன். ஆனால் அதனையே இரண்டாவது முறையாக மீந்து விடும் என்பதற்காக சாப்பிட முடியாது என தெரிவிக்கிறார். அப்போது ஆளாளுக்கு ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கவே இயக்குனர் சேரன் ஒரு ஐடியா கொடுக்கிறார்.
தினமும் காலை இட்லி, தோசை, சப்பாத்தி என பிரித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செய்துகொள்ளலாம். இதன்மூலம் அவரவருக்கு பிடித்ததை சாப்பிட முடியும். மீதமும் ஆகாது. எனவே கணக்கிட்டு எத்தனை சப்பாத்தி வேண்டுமோ அதனை மட்டும் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கிறார். அதற்கு உடனடியாக மற்றவர்கள் அப்படி செய்தால் திடீரென யாருக்காவது பசிக்குமே... ஆனால் அதற்காக மீண்டும் தனியாக செய்ய முடியாது.. இது சரிப்பட்டு வராது என தெரிவிக்கிறார்கள். இவ்வாறாக செல்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இதன் தொடர்ச்சியாக இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.