இதனிடையே ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கை நிரந்தரமாக மூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1970ம் ஆண்டு முதல் இன்று வரை பெரும்பாலான சென்னைவாசிகளின் பிரதான தியேட்டராக இருந்து வருகிறது ஏவிஎம் ராஜேஸ்வரி. கோலிவுட்டின் தனி அடையாளமான ஏவிஎம் ஸ்டுடியோஸுக்கு அருகிலேயே வடபழனி சாலையில் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் அமைந்துள்ளது. காலத்திற்கு ஏற்ற மாதிரி தியேட்டர்கள் அனைத்தும் புதுப்பொலிவிற்கு மாறி வருகின்றன. ஆனால் பழமை மாறாமல், அதே சமயம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டாலும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க:
தற்போது சென்னையில் எத்தனை மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் அமைக்கப்பட்டாலும், நடுத்தர மக்களின் தனித்துவமான தேர்வாக ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் திகழ்ந்து வருகிறது. டிக்கெட் விலை குறைவு என்பதால் வடபழனி பகுதிகளில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற திரையரங்கமாக ஏவிஎம் ராஜேஸ்வரி இருந்து வந்தது.திரையரங்குக்குள் விற்கப்படும் உணவுப் பொருள்களும், குறைந்த விலைக்கே விற்கப்பட்டன.இதனிடையே ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கை நிரந்தரமாக மூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:
புதிய படங்கள் வெளியாகும் நாட்களில் மட்டுமே தியேட்டரில் கூட்டம் கூடும், மற்ற நாட்களில் 20 அல்லது 30 பேர் மட்டுமே படம் பார்க்க வருவார்கள். இதனால் தியேட்டருக்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை, கைகாசு போட்டு படத்தை ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தியேட்டர் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல் மார்ச் மாதம் முதலே தியேட்டரை மூட தீர்மானித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:
கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமடையும் நிலையில், தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதேநிலை இன்னம் சில காலம் நீடித்தால் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள தியேட்டர்களையும் மூடும் நிலை உருவாகும். எது எப்படியோ சென்னைவாசிகளின் மறக்க முடியாத இடங்களில் ஒன்றான ஏவிஎம் தியேட்டர் மூடப்படுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.