லாக்டவுனில் பிரபல நடிகரின் வெறித்தனம்... வைரலாகும் கட்டுமஸ்தான சிக்ஸ்பேக் போட்டோஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 12, 2020, 11:49 AM ISTUpdated : Jun 12, 2020, 11:51 AM IST
லாக்டவுனில் பிரபல நடிகரின் வெறித்தனம்... வைரலாகும் கட்டுமஸ்தான சிக்ஸ்பேக்  போட்டோஸ்...!

சுருக்கம்

யாஷிகா ஆனந்துடன் நடிக்க உள்ள இவன் உத்தமன் திரைப்படத்திற்காக மகத் சிக்ஸ் பேக் வைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

தல அஜித் நடித்த மங்காத்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மகத். அதனைத் தொடர்ந்து விஜய்யின் 'ஜில்லா', 'சென்னை 28 பார்ட் 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தற்போது இவருடைய கைவசம் “கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்”, “இவன் தான் உத்தமன்“ ஆகிய படங்கள் உள்ளன. பல படங்களில் நடித்திருந்தாலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். 

அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான யாஷிகா ஆனந்த் மகத்தை காதலிப்பதாக சொல்ல அதை நாசூக்காக மறுத்தார். இருந்தாலும் யாஷிகா ஆனந்த் மகத்தை நினைத்து உருகினார். இதனால் மகத்திற்கும் அவரது காதலியான பிராச்சிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மகத் தனது நீண்ட நாள் காதலியான பிராச்சியை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். 

இதையும் படிங்க:  “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற திருமணத்தில் மகத்தின் நெருங்கிய நண்பரான சிம்பு பட்டு, வேட்டி சட்டையில் கெத்தாக பங்கேற்றார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள மகத்தும், பிராச்சியும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வருகின்றனர். தங்களது காதல் முதல் கல்யாணம் வரையிலான மலரும் நினைவுகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். 

யாஷிகா ஆனந்துடன் நடிக்க உள்ள இவன் உத்தமன் திரைப்படத்திற்காக மகத் சிக்ஸ் பேக் வைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.இந்நிலையில் மகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டுமஸ்தான சிக்ஸ்பேக் தோற்றத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இதெல்லாம்... வைரலாகும் “அன்றே கணித்த சூர்யா” மீம்ஸ்... ஸ்பெஷல் தொகுப்பு...!

லாக்டவுன் நேரத்தில் மகத்தின் இந்த மிரட்டலான மாற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் லைக்குகளை வாரிக்குவிக்கின்றனர். செம்ம சூப்பர் பாஸ்...சீக்கிரம் நீங்கள் சிம்புவுடன் நடிக்கும் படத்தை பார்க்க வேண்டும் என எஸ்.டி.ஆர்.ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிலரோ எங்க எஸ்.டி.ஆரையும் இதே லுக்கில் பார்க்க வேண்டும் அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க எனறு அன்பு கட்டளை போட்டுள்ளனர். மகத்தின் மிரட்டலான நியூ லுக் போட்டோஸ் இதோ... 

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!