சென்னையில் மர்ம ஆசாமி அரங்கேற்றிய பரபரப்பு சம்பவம்! போலீசில் சிக்கி தர்மஅடி வாக்கிய யோகிபாபு!

Published : Jan 28, 2019, 04:37 PM ISTUpdated : Jan 28, 2019, 04:41 PM IST
சென்னையில் மர்ம ஆசாமி அரங்கேற்றிய பரபரப்பு சம்பவம்! போலீசில் சிக்கி தர்மஅடி வாக்கிய யோகிபாபு!

சுருக்கம்

சென்னையில் சில வருடங்களுக்கு முன் மர்ம ஆசாமி அரங்கேற்றி வந்த நாச வேலையாள், நடு இரவில் போலீசில் வசமாக சிக்கி யோகி பாபு, தர்மஅடி வாங்கிய சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.   

சென்னையில் சில வருடங்களுக்கு முன் மர்ம ஆசாமி அரங்கேற்றி வந்த நாச வேலையால், நடு இரவில் போலீசில் வசமாக சிக்கி யோகி பாபு, தர்மஅடி வாங்கிய சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் யோகிபாபு. இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மட்டும் அல்ல பிரபலங்களையும் கவர்ந்து விட்டது.

இதனால் இவருக்கு முன்னணி நடிகர்கள் கூட அவர்களுடைய படத்தில் நடிக்க வைக்க ரெகமெண்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.  நடிகை நயன்தாரா, இவருடைய மிகப்பெரிய ரசிகையாகவே மாறிவிட்டாராம்.

இதனால் 'கோலமாவு கோகிலா' படத்தை தொடர்ந்து நடித்த, 'விஸ்வாசம்' படத்தில் ரெக்கமெண்ட் செய்து இவரை நடிக்க வைத்தார்.  மேலும் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படத்திலும் யோகிபாபு நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் போலீசில் சிக்கி அடிவாங்கிய சம்பவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். "யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த போது ஒரு சில நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு முறை நாடகம் முடிந்து நள்ளிரவு வேளையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த நேரம் வேறு சென்னையில் மர்ம ஆசாமி ஒருவர் பைக் மற்றும் கார்களுக்கு பெட்ரோல் ஊத்தி நெருப்பு வைத்து எரித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதனால் ஒருவேளை இந்த ஆசாமி யோகி பாபு ஆக இருக்கலாம் என போலீசார் நினைத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது காது நரம்புகள் வலிக்கும் அளவிற்கு அடித்துள்ளனர். பின் நாடகத்தில் நடித்து விட்டு வந்ததாக யோகிபாபு நிரூபித்த பிறகு காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தார்களாம்".

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!