Ilaiyaraaja case : இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

By Ganesh AsianetFirst Published Feb 18, 2022, 12:50 PM IST
Highlights

எக்கோ மற்றும் அகி மியூசிக் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்தும் காப்புரிமை பெறாமல் இளையராஜாவின் (ilaiyaraaja) பாடல்களை பயன்படுத்தி வந்துள்ளன. இதை எதிர்த்து இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காதல், சோகம், வேதனை, துக்கம் போன்ற பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசை தான். அதே போல், பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம். 1970கள் துவங்கி திரைதுறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வருகிறார் இளையராஜா (ilaiyaraaja). இவர் இதுவரை 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் பாடல்கள் பல்வேறு தளங்கள் காப்புரிமை பெற்று ஒலிபரப்பி வருகின்றனர். அதில் எக்கோ மற்றும் அகி மியூசிக் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்தும் காப்புரிமை பெறாமல் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி வந்துள்ளன. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடினார் இளையராஜா.

முதலில் தனி நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் (chennai High court) இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதனால் இனி எக்கோ மற்றும் அகி மியூசிக் ஆகிய நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த முடியாது.

இதையும் படியுங்கள்...  ilaiyaraja- Gangai Amaran : பிரிவும்... சந்திப்பும்!! ஒரே ஒரு போன் காலில் முடிவுக்கு வந்த 13 வருட விரிசல்

click me!