Valimai movie : “வலிமை வலிக்குது.!” கண்டுகொள்ளாத அஜித்.. பொசுங்கிய போனி கபூர்.!

Published : Feb 18, 2022, 08:35 AM ISTUpdated : Feb 18, 2022, 10:21 AM IST
Valimai movie : “வலிமை வலிக்குது.!” கண்டுகொள்ளாத அஜித்.. பொசுங்கிய போனி கபூர்.!

சுருக்கம்

"வலிமையை இன்னமும் ரிலீஸ் பண்ணாமல் வைத்திருப்பதன் மூலம் அதன் மீதான கிரேஸானது குறைந்து கொண்டே போகிறது சலிப்பின் காரணமாக.."

சூப்பர் ஸ்டாரின் ‘தலைவர் 169’ அறிவிப்பை தாண்டியும், தளபதியின் ‘பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக்குத்தை கடந்தும் வலிமையின் ரிலீஸ் ஃபீவர் எகிறித்தான் நிற்கிறது தமிழகத்தில். பல சினிமா பிரபலங்களில் ‘மரண வெயிட்டிங் ஃபார் பிப் 24’ என்று அஜித்தை திரையில் காண அலை பாய்கிறார்கள். அன்று படம் கண்டிப்பாய் ரிலீஸாகிறது என்று ப்ரமோவையும் தயாரிப்பு க்ரூ வெளியிட்டுள்ளது.

ஆக வலிமை ரிலீஸுக்கான கவுண்ட் டவுனை ஓப்பன் செய்துவிட்டு செம்ம ஆர்வம் மற்று குஷியாக அஜித், இயக்குநர் விநோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இருப்பார்கள்! என்று எல்லோரும் நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள். ஆனால் போனிகபூரின் தயாரிப்பு நிறுவனத்தின் சைடில் கொஞ்சம் மூக்கை நுழைத்து ஸ்மெல் செய்தால், வேறு மாதிரி தகவல்கள் வருகின்றன.

அதாவது, ’நேர்கொண்ட பார்வை’ முடிந்து சில மாதங்களில் துவக்கப்பட்ட வலிமை இன்னமும் ரிலீஸாகவில்லை. இப்போ ரிலீஸ் அப்போ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, கொரோனா காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. ஆனால் அதற்குள் சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் வரை மற்ற மெகா நடிகர்களின் படங்கள் எடுப்பதும் முடிப்பதும், ரிலீஸாவதுமாக உள்ளன. அதிலும் அஜித்தின் நேரடி போட்டியாளரான விஜய்யோ வெச்சு வெளுக்கிறார்  அடுத்தடுத்த படங்களில். ஆனால் வலிமையை இன்னமும் ரிலீஸ் பண்ணாமல் வைத்திருப்பதன் மூலம் அதன் மீதான கிரேஸானது குறைந்து கொண்டே போகிறது சலிப்பின் காரணமாக.

அப்படத்தை எப்போது ரிலீஸ் பண்ணினாலும் அஜித்தின் ரசிகர்கள் பார்ப்பார்கள். ஆனால் அந்த வசூல் மட்டும் போதாதே. படத்தின் ரியல் பட்ஜெட் மட்டுமில்லாமல், இவ்வளவு நாள் அடைகாப்பதன் மூலமாக உருவாகியிருக்கும் செலவையும் ஈடு செய்ய வேண்டுமென்றால் பெரிய வசூல் தேவை. அதற்கு மிக சிறப்பான விளம்பரம் தேவை. அதனால்தான் அஜித்தை வலிமை ரிலீஸ் குறித்து சில நொடிகள் பேச சொல்லி ஒரு வீடியோ ப்ரமோவுக்கு தயாரானார் போனிகபூர். ஆனால் அஜித் தனது வழக்கமான கொள்கைகளின் படி ‘நோ வே’ என்று சொல்லிவிட்டாராம். ‘பிடிச்சவங்க பார்க்கட்டும், பிடிக்கலைன்னா பார்க்க வேண்டாம்.’ என்று பழைய அதே நியாயத்தையே இப்போதும் பேசிவிட்டாராம்.

ஏ.கே.வின் இந்த வார்த்தைகளால் பொசுங்கிவிட்டாராம் போனிகபூர். பட ரிலீஸ் இவ்வளவு தள்ளிப்போவதால் அஜித்துக்கு எந்த இழப்புமில்லை. ஆனால் போனிகபூருக்கு தினம் தினம் இதன் மூலம் செலவுதான், இழப்புதான். அதை சரிக்கட்டிட தான் இந்த சிறிய உதவியை கேட்டார். ஆனால் அஜித் கைவிரித்துவிட்டாராம். இதனால் வேறு வழியின்றி தன் மகள் ஜான்வி கபூரை தனது இன்ஸ்டாவின் மூலம் வலிமையை பிரபலப்படுத்த சொன்னார் போனி. ஜான்வியும் அதை செய்தார்.

அஜித்தோடு இவ்வளவு முரண் இருந்தாலும், அவரது அடுத்த படத்தையும் போனியே தயாரிக்கிறார், விநோத்தே இயக்குறார்  என்பதே  ஹாட் தகவல்.

ஆனால் வலிமை பற்றி தன் நண்பர்களிடம் பேசும் போனிகபூர் ‘வலிமை வலிக்கிறது’ என்கிறார்.

ப்ப்ப்பாவம்ல!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!