
உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த படம் என்றால் அது சிவகார்த்தி கேயனின் வேலைக்காரன் படம் காரணம் சிவகார்த்திகேயன் மற்றும் மோகன் ராஜா கூட்டணி அதோடு சிவகார்த்திகேயன் படம் என்றால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஒருபக்கம், அடுத்து சினிமாகாரர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் என்ன சாதிக்கிறார் என்பது தான் அதை ஈண்டும் நிருபித்துள்ளார். இப்படம் வெற்றியோடு வசூலிலும் மிக பெரிய சாதனை என்று தான் சொல்லணும். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி வந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
அதேபோல் பிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக சினேகா நடித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் சென்னையில் ரூ. 89 லட்சம் வசூலித்துள்ளது. அதோடு சென்னையில் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்களின் வரிசையில், வேலைக்காரன் 7-வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ 15.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் ரூ 30 கோடிகளுக்கு மேல் 4 நாட்களில் வசூல் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வேலைக்காரன் படம் வசூல் சென்னையில் 98 லட்சமும் Day 2 Chennai City – 98Lacs. படத்தில் சமூக கருத்து இருப்பதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, உலக அளவில் முதல் நாளில் நல்ல வசூலையும் சென்னையில் மட்டும் முதல் இரண்டு நாட்களில் ரூ 15.5 கோடி வசூலையும் பெற்றது.
இதனையடுத்து தற்போது இந்த படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது, சென்னையில் மட்டும் படம் ரூ 2.88 கோடி வசூலாகி உள்ளது, சிவகார்த்திகேயன் வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்றால் அது வேலைக்காரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.