ஓடிடிக்கும் விரைவில் வருகிறது ஆப்பு..! அதிரடி காட்டும் மத்திய அரசு..!

By manimegalai aFirst Published Nov 11, 2020, 6:08 PM IST
Highlights

விரைவில் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸுக்கு ஆப்பு வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய வரையறை கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.
 

விரைவில் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸுக்கு ஆப்பு வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய வரையறை கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக, ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை உச்ச கட்ட கவர்ச்சியில் உள்ளது. எனவே இதுபோன்ற வற்றை தடை செய்ய வேண்டும் என நீண்டகாலமாகவே, சமூக ஆர்வலர்கள், மற்றும் திரைப்பட ரசிகர்கள் தங்களுடைய கோரிக்கையை முன் வைத்து வருகிறார்கள்.

மேலும் ஓடிடி தளங்களுக்கு திரைப்படங்களுக்கு இருப்பது போன்று சென்சார் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வேண்டும் என்றும் சென்சார் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஓடிடி தளங்களுக்கு இருந்தால் மட்டுமே கலாச்சார சீரழிவு ஏற்படாமல் இருக்கும் என்றும் கூறிவந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் இதுகுறித்து ஆலோசித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் டிஜிட்டல் மீடியா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஒப்புதல் அளித்துள்ளார் .

இதனை அடுத்து ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதால் சென்சார் உள்பட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஓடிடி தலங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

click me!