காவிரியில் இருந்து தண்ணீர் கேட்பது தமிழர்களின் உரிமை…பெங்களூரு கன்னட பட விழாவில் நடிகர் விஷால் தில் பேச்சு…

Asianet News Tamil  
Published : Jun 30, 2017, 05:44 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
காவிரியில் இருந்து தண்ணீர் கேட்பது தமிழர்களின் உரிமை…பெங்களூரு கன்னட பட விழாவில் நடிகர் விஷால் தில் பேச்சு…

சுருக்கம்

cauvery water is rights to tamil people...vishal speech

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால், தங்களுக்குரிய காவிரி நீரை கேட்பது தமிழர்களின் உரிமை என்றும், தண்ணீர் கேட்கக் கூடாது என கூற யாருக்கும் உரிமை இல்லை என்றும் அதிரடியாக பேசினார்

ரகுவீரா என்ற  கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்ற நடிகர் விஷால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழா மேடைக்கு தாமதமாக வந்து சேர்ந்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய விஷால், கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவானாலும், தமிழில் பேசுவதில் பெருமை அடைகிறேன் என கூறி தமிழிலிலேயே பேசினார். காவிரியில் தண்ணீர் கேட்பது, தமிழர்களுடைய உரிமை என்றும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை மனதில் வைத்து  மாநில பேதம் பார்க்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

 தமிழகத்தில், ஏராளமான கன்னடர்கள் வாழ்கின்றனர். அதேபோல், கர்நாடகாவிலும் எண்ணற்ற தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே  அனைவருக்கும் பாதுகாப்பு தருவது, அந்த மாநில மக்களின் கடமை என்று கூறினார்.

காவிரி நீர் என்பது கர்நாடகாவுக்கு மட்டுமே சொந்தம் கிடையாது அதில்  எங்களுக்கும் உரிமை இருப்பதாலேயே கேட்கிறோம் என்று பேசிய விஷால் தண்ணீர் கேட்க கூடாது  என்று  சொல்ல, யாருக்கும் உரிமையில்லை என்றார். 

கர்நாடகாவிலிருந்து யார் வந்து, தமிழகத்தில் படம் எடுத்தாலும், தயாரிப்பாளர் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் விஷால் தெரிவித்தார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்