
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புவும் ஓவியாவும் நேரடியாக மோதிக் கொண்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்குநாள் சூடும் வேகமும் கூடி வருகிறது.
வீட்டில் இல்லாமல், பொழுதுபோக்கு இல்லாமல், நேரம் போவது தெரியாமல் தனிமையில் சிறையில் அடைபட்டதுபோல் இருப்பதால், பொறுமை இழக்கும் இந்த பிரபலங்கள், தங்களுடைய ஒரிஜினல் முகத்தை விட்டுவிட்டு, இயல்பான கோபதாபங்களை வெளிப்படுத்துவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரபலங்கள், 15 பேருக்கும் தினசரி, அவர்கள் உணவை அவர்களே சமைக்க வேண்டும். துணிகள் துவைத்துக் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உண்டு.
இதனால், குழுக்களாக வேலைகளைப் பிரித்துப் போட்டு செய்கின்றனர். குழுவில் உள்ளவர்கள், கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள குழுத் தலைவரும் உண்டு.
குழுவுக்கு கட்டுப்படாதவர்களை புத்தி சொல்லி திருத்துவது வழிகாட்டுவது அவருடைய வேலை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள 15 பேரில் நடிகை ஓவியாவும் ஒருவர்.
ஆரம்பம் முதலே நடிகை ஓவியா, வேலைகளில் ஈடுபடுவதில்லை. ஓ.பி. அடித்துக் கொண்டும், வேலைகளைச் செய்யாமல் கிண்டல் செய்து கொண்டும் பாட்டு பாடிக் கொண்டும் இருக்கிறார்.
நேற்று, உணவருந்தும் டேபிளில் அனைவரும் அமர்ந்திருந்தபோது, இது பற்றி குழுத்தலைவர் சிநேகன், ஓவியாவிற்கு புத்தி சொல்ல, ஒரே ரூல்ஸ் ரூல்ஸ்-ன்னு போட்டு கொல்றீங்களே. என்று ஓவியா சலித்துக்கொள்கிறார்.
இதற்கு குழு தலைவர் சொன்னா கேட்கமாட்டீங்களா? குழுத் தலைவர் சொன்னா கட்டுடப்படணும்ன்றது பிக்பாஸ் விதி என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று சிநேகன் சொல்கிறார். அதற்கு ஓ.கே. ஓ.கே. லிவ்ட் ஒன்று ஓவியா கிண்டல் செய்கிறார்.
இதனால ஆத்திரமடைந்த சினேகன், உங்கள் புத்திசாலித்தனத்தை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். அதற்கு, நான் ப்ரிலியன்டா இருக்குறது என் சொந்த விஷயம் என்று ஓவியா கோபப்படுகிறார்.
அப்ப நீங்க புத்திசாலி... நான் முட்டாளா? என்று சினேகன் ஆத்திரத்துடன் கேட்க, அதைப்பற்றி நான் எப்படி சொல்வது என்று ஓவியா பதிலுக்கு கலாய்க்கிறார்.
இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா கருப்பு, கோபத்துடன் ஏம்மா அவருதான பேசிட்டிருக்காருல்ல நீ என்ன குறுக்கே குறுக்கே பேசுற? என்று கேட்க, யு ஷட் அப் என்று ஓவியா கஞ்சா கருப்பை பார்த்து சொல்ல... என்ன ஷட் அப் என்று கஞ்சா கருப்பு எகிற அந்த இடமே பரபரப்பானது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.