அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’க்காக அதிரடி வேகத்தில் தயாராகிவரும் கேசினோ தியேட்டர்...

By Muthurama LingamFirst Published Jul 27, 2019, 5:41 PM IST
Highlights

தரமான ஆங்கிலப்படம் பார்ப்பவர்களின் ஆதர்சமான தியேட்டராகத் திகழ்ந்த கேசினோ தியேட்டர் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’படத்துடன் மீண்டும் திறக்கப்படவிருக்கிறது. 78 கால பழமை வாய்ந்த சென்னையின் முக்கியமான தியேட்டர்களில் கேசினோவும் ஒன்று.

தரமான ஆங்கிலப்படம் பார்ப்பவர்களின் ஆதர்சமான தியேட்டராகத் திகழ்ந்த கேசினோ தியேட்டர் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’படத்துடன் மீண்டும் திறக்கப்படவிருக்கிறது. 78 கால பழமை வாய்ந்த சென்னையின் முக்கியமான தியேட்டர்களில் கேசினோவும் ஒன்று.

சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்று கேசினோ. ராயப்பேட்டையிலுள்ள  கேசினோ தியேட்டரில்  1941ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘டர்ண்ட் அவுட் நைஸ் எகெய்ன்’(Turned Out Nice Again) என்ற ஆங்கிலத் திரைப்படம் முதன்முதலாக திரையிடப்பட்டது. ஆங்கிலத் திரைப்படங்களுக்கு மட்டுமே பெயர்போன கேசினோ திரையரங்கில் 1950க்குப் பிறகு  அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மறுபடியும் 1971 முதல் ஆங்கிலத்திரைப்படங்கள் பக்கம் கவனத்தை திருப்பியது கேசினோ. 2000ம் ஆண்டுக்குப் பிறகு தெலுங்கு திரைப்படங்களை திரையிடத்தொடங்கியது. திரைப்பட திருவிழா நடக்கும் நேரங்களில் கேசினோவில் உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும். பின்னர் திரையரங்குக்கு போதிய கூட்டம் வராததால் சில ஆண்டுகளுக்கு முன் இழுத்து மூடப்பட்டது.

இந்நிலையில் கேசினோ திரையரங்கம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு ஆக்ஸ்ட் மாதம் முதல் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளது. இருக்கைகள், ஸ்கிரீன், சவுண்ட் சிஸ்டம், உள்கட்டமைப்பு என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருவதாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.’நேர்கொண்ட பார்வை’ஆகஸ்ட் 8 ல்  வெளியாவதால் அன்று முதலே பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம். அதையொட்டி மும்முடங்கு மும்முரமாக பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன  என நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

click me!