கொரோனா தொற்றுடன் தலைமறைவு... வனிதாவை தாறுமாறாக விமர்சித்த சூர்யா தேவி மீது வழக்குப்பதிவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 28, 2020, 10:33 AM IST
Highlights

ஆனால் சுகாதாரத்துறையினர் அவருடைய சாலிகிராமம் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர் குடும்பத்துடன் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. 

கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியது. அந்த வரிசையில் சேர்ந்து கொண்ட சூர்யா தேவி என்ற பெண், தேவையில்லாமல் வனிதாவின் 3வது திருமணம் குறித்து யூ-டியூப்பில் தரக்குறைவாக விமர்சித்து வந்தார். 

தன்னை பற்றி தேவை இல்லாமலும் அசிங்கமாக பேசி யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு வருவதாக சூர்யா தேவி என்ற பெண் மீது வனிதா போரூர்  எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். குறிப்பாக சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும், அதற்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார் வனிதாவின் லாயர்.இதை தொடர்ந்து, வனிதா தன் மீது அவதூறு பரப்பி வருவதாக, சூர்யா தேவியும் பதிலுக்கு வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தனக்கு மன உளைச்சலை வனிதா ஏற்படுத்தியதாக புகார் அளித்திருந்தார். 

இந்நிலையில் வனிதா அளித்த கொலை மிரட்டல் புகாரின் அடிப்படையில் சூர்யாதேவி கடந்த 22ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நடிகை கஸ்தூரி தனது லாயர் மூலமாக சூர்யாதேவிக்கு ஜாமீன் பெற்றுத் தந்தார். அன்றைய தினமே ஜாமீனில் வெளிவந்த சூர்யா தேவிக்கும், அவரிடம் விசாரணை நடத்திய பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே வீடியோ ஒன்றை வெளியிட்ட சூர்யா தேவி, தான் தலைமறைவாக இல்லை என்றும், தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பப்படுவதாகவும் கூறினார். ஆனால் சுகாதாரத்துறையினர் அவருடைய சாலிகிராமம் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர் குடும்பத்துடன் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் சூர்யா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம், தடை உத்தரவை மீறி செயல்படுதல், அனேக நபர்களுக்கு தொற்று நோயை பரப்பும் நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சூர்யா தேவியை தேடி வருகின்றனர். 
 

click me!