
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் இளைய மகன் பிரபு, சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ராம்குமார்.
இவர் மீது தான் தற்போது செக் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரரான அக்ஷய் சரின் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிவாஜியின் மகன் ராம்குமார் மீதும், அவரது மகன் துஷ்யந்த் மீதும் செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம்... மாப்பிள்ளை இவரா? - காட்டுத்தீ போல் பரவும் தகவல்... பின்னணி என்ன?
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராம்குமாரின் மகன் துஷ்யந்தின் மனைவிக்கு தொடர்புள்ள ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு மேற்கொண்டோம். அப்போது கடந்த 2019-ம் ஆண்டு துஷ்யந்த் சார்பில் ரூ.15 லட்சத்துக்கான இரண்டு காசோலைகள் அளிக்கப்பட்டன. நாங்கள் வங்கியில் அந்த காசோலையை செலுத்தியபோது அது பணம் இல்லாததால் திரும்பி வந்துவிட்டது.
வங்கிக் கணக்கில் பணம் இல்லை என தெரிந்தும் எங்களுக்கு காசோலை அளித்தது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே துஷ்யந்த் மீதும் அவரது மனைவி அபிராமி மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மகன் தரவேண்டிய பணத்துக்கு பொறுப்பேற்காததால் ராம்குமார் மீதும் நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... பிரதமர் மோடியை நேரில் பார்த்தால்... இந்த கேள்வியை கண்டிப்பா கேட்பேன்... நடிகர் சிம்பு ஓபன் டாக்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.