
ஏ.ஆர்.ரகுமானிடம் நஷ்டஈடு கோரி தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளார்.
இசை புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். இவர் இந்தியாவில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதை விட வெளிநாட்டில் தான் பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இவரது இசையை கேட்பதற்கும், ஆஸ்கர் நாயகனை பார்பதற்குமே பல ரசிகர்கள் குவிவார்கள். அந்த வகையில் கடந்த 2000ம் ஆண்டு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளர் இசை நிகழ்ச்சி துபாயில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததை விட குறைவான மக்களே கலந்து கொண்டுள்ளனர். இதனால், நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த செலவு கூட வரவில்லை என கூறப்பட்டது. எனவே இந்த நிகழ்ச்சியில் தனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்காக ஏ.ஆர்.ரகுமான் 3 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான இன்றைய விசாரணை நடந்து வந்த நிலையில், நிகழ்ச்சி லாபம் இல்லை என்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தகும் இல்லை என்றும், நிகழ்ச்சியில் லாபம் இல்லை என்பதற்காக தனக்கு பேசப்பட்ட தொகையை கூட நிகழ்ச்சியாளர்கள் கொடுக்கவில்லை என ஏ.ஆர்.ரகுமானின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் எந்த விளக்கமும் நீதிமன்றத்திற்கு அளிக்காத நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.