அன்னை மண்ணில் கடும் குளிர்! அமெரிக்காவில் உணர முடிகிறது! நெகிழ்ச்சியாக பேசி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த கேப்டன்!

By manimegalai aFirst Published Jan 7, 2019, 2:15 PM IST
Highlights

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த பிரபல நடிகருமான, கேப்டன் விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் இருந்த படி தமிழகத்தில், வாட்டி எடுக்கும் கடும் குளிரை அங்கே உணர முடிவதாக நெகிழ்ச்சியுடன் ஒரு ட்விட் போட்டுள்ளார். 
 

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த பிரபல நடிகருமான, கேப்டன் விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் இருந்த படி தமிழகத்தில், வாட்டி எடுக்கும் கடும் குளிரை அங்கே உணர முடிவதாக நெகிழ்ச்சியுடன் ஒரு ட்விட் போட்டுள்ளார். 

கேப்டன் விஜயகாந்த், ஏற்கனவே கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார். 
கேப்டன் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும்,  அமெரிக்காவிலேயே தங்கி விடாமல் அவ்வப்போது சென்னைக்கு  வந்து ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்திக்க தவறியதே இல்லை.

இந்நிலையில் கடந்த வாரம் திடீர் என, விஜயகாந்துக்கு உடல் நிலை மிகவும் மோசமானது. இதன் காரணமாக மீண்டும் சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, மகன் சண்முகப் பாண்டியன் ஆகியோரும் சென்றனர்.

தற்போது தீவிர சிகிச்சைக்கு பின், கேப்டன் விஜயகாந்தின் உடல் நிலை சீராகியுள்ளது. இது குறித்து  குறித்து அவ்வப்போது செய்திகளை விஜயகாந்த் தரப்பை சேர்ந்தவர்கள் வெளியிட்டும் வந்தனர். 

உடல் நலம் குறித்து, வெளிப்படுத்தும் வகையில்... கடந்த 4 ஆம் தேதி,  விஜயகாந்த்,  மனைவி பிரேமலதாவுடன் ஐமேக்ஸ் திரையரங்கிற்கு சென்று, அக்வாமேன் திரைப்படம் பார்த்ததை புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். 

 

அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது ! pic.twitter.com/QjuTqGWC8d

— Vijayakant (@iVijayakant)

இதை தொடர்ந்து, தற்போது மிகவும் ஸ்டைலிஷான புகைப்படத்தோடு...  "அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது !" என நெகிழ்ச்சியோடு ட்விட் போட்டுள்ளார். இந்த ட்விட்டை இவர் போட்ட சில மணிநேரங்களில் ரசிகர்கள் மத்தியிலும் கட்சி தொண்டர்கள் மத்தியிலும் ஆயிரக்கணக்கான லைக்குகளை வாரி குவித்து வருகிறார்கள். 


 

click me!